தாமரை பூத்த தடாகமடி
இசைக்கவி திருச்சி தியாகராஜன் இயற்றி, 'ஹிந்துஸ்தானி காந்தாரி' ராகத்தில் M.M.தண்டபாணி தேசிகர் பாடிய மிகப் பிரபலமான பாடல் 'தாமரை பூத்த தடாகமடி'.
தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - ஞானத் (தாமரை)
பாமழை யால்வற்றாப் பொய்கையடி - தமிழ்ப்
பைங்கிளி கள்சுற்றிப் பாடுதடி - ஞானத்
தாமரை பூத்ததடாகமடி -செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி (தாமரை)
காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவிம கிழும்தமிழ்த் தென்றலதே - இசை
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞானத் (தாமரை)
தாமரை பூத்த தடாகமடி -செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி- ஞானத்
தாமரை பூத்த தடாகமடி....
தாமரை பூத்த தடாகமடி என்று யு ட்யூபில் பதிவு செய்து, M.M.தண்டபாணி தேசிகர் இந்த அருமையான பாடலைப் பாடும் முறையைக் கேட்டு மகிழலாம்.