சாதீ அழியட்டும்

அறிவு பொதுவுடமையாகி ஆணுக்கு பெண் சமமாகும்
இன்றும் உண்டு சாதீ - ஓட்டுவேட்டையாடி.. ஊரை கூறுபோட...
என்றும் விஷம் விஷமே தான் தன் வீரியம் குறைந்தாலும்!

சாதீயை கொளுத்திவிட்ட உயர்குலங்கள் தம்
சாதனைகளை ஆண்டாண்டாய் அனுவவித்து - இனி
ஒதுக்கீட்டு வேதனைகளை ருசிக்கவேண்டிய காலம்!

வர்ணபேதம் மறுக்கும் வாய்தான் கலப்புமண எதிர்ப்புக்கு!
சடங்குகள் சுரண்டல்கள் எனினும் சுருக்கமாய் பரிகாரங்கள்!
சமூகம் தொலைக்கவேண்டியவை நோய்தொற்றாய் தொடரவேண்டாம்!

குழந்தைகள் மனதுக்கு இனியும் விஷம் ஊட்டவேண்டாம்..
அழகாய் அன்பாய் இனிப்பாய் மனிதநேயம் சுவைக்கட்டும்!
சாதீ கருக்கிவிட்ட தடங்களில் பசுமை சேர்ந்து செழிக்கட்டும்!

எழுதியவர் : Dr.C.R.Suriyakumar (25-Dec-14, 5:25 am)
பார்வை : 673

மேலே