என்னதான் நடக்குது
இளமையின் வேகமும்
பணத்தின் மோகமும்
உட்கார்ந்து உண்ணக்கூட
விடுவதில்லை என்னை ????
காலை தொடங்கி
இரவு வரை
கடிகாரத்துக்குமான
எனக்குமான
சண்டை ஓய்ந்தபாடில்லை ????
உட்கார்ந்தும் சாய்ந்தும்
படுத்தும் யோசித்து பார்க்கின்றேன்
விளங்கவில்லை !!!!!
காலில் சக்கரத்தை கட்டி
எங்கே ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ???
யாருக்காக ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ???