கூந்தல்

இமயம் என்ன உயரம்
ஏறிவிடுவேன் நீ
இமைக்காமல் பேசினால்
உன் கூந்தல் முனையில்
சிக்கி தவிக்கின்றேன்
நீயோ பேசாமல் திரும்புகிறாய் !

சிக்கிக்கொள்ளுமுன் நினைத்தேன்
கூந்தல் பூவாசம் வீசும்
பாச வலை என்று
சிக்கி தவிக்கும் போதே உணர்ந்தேன்
கூந்தல் ஆண்களை கொன்று தின்னும்
சிலந்தி வலை என்று

பாஞ்சாலி முடிந்துக்கொள்ள
பரதம் அழுதது
கண்ணகி கொறிவிடால்
மதுரையே ! எரிந்தது
நீயோ !
ஆறடி கூந்தலை
அறையடியக்கி
அலையவிடுகிறாய் என்னை

புதிதாய் நீ
பத்தவிக்க வேண்டியதில்லை
ஏற்கனவே கோடை வெயில்
எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது
கோபமாக பார்கதே
பூலோக வேப்பமதாலே
இன்று தீர்க்கமுடியாத பிரச்சினை
இரட்டை சூரியனை தாங்காது பூமி

நான் பின்னல் சுற்றியதை
உன்னை விட
நீ சூடிச்செல்லும்
பூக்கள் அறியும் நீ தான்
சாலையில் திரும்பி பார்ப்பதே இல்லையே !

இப்போதைக்கு அவள் இதயத்தில் இடமில்லையாம்
பூக்களே நமக்குல்
புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வோம்
அவள் கூந்தலில் வாழ்ந்துமடியும்
அந்த ஓரிரு மணியாவது தா
உதியமாய் உயிறேனும் தருகிறேன்

உனக்கேனே உடன்வர
கருகிடும் ஒரு மலர்

எழுதியவர் : umashangar (25-Dec-14, 1:15 pm)
Tanglish : koonthal
பார்வை : 130

மேலே