என்ன ஜோ இப்படி பயப்படறே

டீச்சர் : "உன்னை வரிசையோட கடைசியிலதான போய் நிக்கச் சொன்னேன். ஏன் இங்க நிக்கற?"

பப்பு : "நான் போனேன் டீச்சர். ஆனால் எனக்கு முன்னாடியே அங்கே யாரோ நிக்கறாங்க. அதுதான் நான் திரும்ப வந்துட்டேன்."

*********************

ஜோவும் நண்பரும் டபுள் டக்கர் பஸ்ஸில் ஏறினார்கள். ஜோ மேலேயும் நண்பர் கீழேயும் உட்கார இடம் கிடைத்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேலே சென்ற நண்பர் ஜோ மிகவும் பயத்துடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு,

நண்பர் : "என்ன ஜோ இப்படி பயப்படறே?"

ஜோ : "உனக்கு கீழே டிரைவர் இருக்கார்.. அதனால் பயமில்லை. இங்க டிரைவர் இல்லாம உட்கார்ந்து பார்.. அப்போ தெரியும் என் கஷ்டம்."

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (25-Dec-14, 3:59 pm)
பார்வை : 130

மேலே