வாடை - சந்தோஷ்

மது நாட்டுக்கும்
உயிருக்கும் கேடு

மிகச்சிறந்த நகைச்சுவையென
விழுந்து விழுந்து
சிரிக்கிறார் காந்தி...
ஏழை டாஸ்மாக்
ஊழியனின் சம்பளத்தில்....!!

-------------------------------------

மது ஒழிப்பு மாநாடு
அலைமோதிய கூட்டத்தில்
நிறைவேறியது தீர்மானம்.

இரட்டிப்பானது வருமானம்
அரசு மதுபானக்கடைக்கு...!

------------------------------------

கற்பழிப்பு தடுப்புச்சட்டம்.

அடுத்த ஆட்சியில்
எதிர்பார்க்கலாம்.
அரசு விபாச்சார விடுதியும்
இலவச ஆணுறையும்..!

--------------------------------------

கவிஞர்களே....!
பதட்டப்படாதீர்கள்

அரசு பரிசீலிக்கும்
நமக்கு கண்ணதாசன் விஸ்கி
மானிய விலையில்...


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-Dec-14, 9:24 pm)
பார்வை : 99

மேலே