கவிக்கு ஓர் கவிதை

தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.

கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.

கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.

கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!

மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழுச்சி அலைக்கு ஈடாகுமா?

காலமெல்லாம் காத்திருப்போம்
உன் கவி படையலை சுவைக்க....!
இரவு பகலாய் விழித்திருப்போம்
உன் வழிந்தோடும்
கவி மழையில் குளிக்க....!

இது போல் என்றென்றும்
கனி போல் கவி படைத்து....!
காவியமாய் எங்கள்
நெஞ்சினில் நிறைந்து
நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (26-Dec-14, 7:42 am)
பார்வை : 5846

மேலே