தாய் - அழியாத அன்பு
வீசாத காற்று, விளையாத பூமி
பூக்காத மலர் ; பொழியாத வானம்
பார்க்காத கண்கள் ; புண்பட்ட நெஞ்சம்
பேரின்பம் தந்திடுமோ -
தாயே, என்
ஆகாயம் நிலவாக நின்றாயே - உன்
ஆதாரம் எனைவிட்டுச் சென்றாயே..
பாராத சுமையெல்லாம் நீகண்டு
பசியெல்லாம் தீர்த்தாயே பாசத்திலே ..
ஆளாகி விட்டென்னை தூரத்திலே
போனாயோ வாராத துக்கத்திலே
தீராத உன்அன்பு தாகத்திலே - மனம்
போராட வருவாயோ பக்கத்திலே..
வேராக நான்வாழும் உலகத்திலே - உன்
வியர்வைகள் நீராக நிற்க்குதம்மா ..
அன்பிற்கு அழகென்னும் மகுடம் சூடி - அவள்
ஆழ்கடலாய்ச் சென்றாளோ அமைதிகொண்டு..
தாயன்புக் கீடேது..!