மீளமை - பாகம் - 2 - சூரியா

மீளமை - பாகம் - 2

"இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகள் அல்ல. பழம் பெரும் கைதிகளும் நிறையவே இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை.

மனம் என்றால் என்ன? எவ்வாறு இயங்குகின்றது? என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுவதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.

நம் பிரக்ஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.

பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (subunconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)

என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும். " - ஓசோ.

கார்த்திகை மாதக் குளிர் ஜில்லிட, சில்வண்டுகள் ரீங்காரமிட்டு கொண்டிருக்க, கொசுவலையை இறக்கி விட்டு படுத்தான். எப்போதும் படுத்த அடுத்த நிமிடத்தில் உறங்கி விடும் சுகேந்தன் அன்று உறக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தான். வழியில் சென்ற ஊர்திகள் ஒலிபெருக்கி செல்ல சவுகரியமின்றி விட்டத்தை பார்த்தவாறு படுத்து கிடந்தான்.

சற்று நேரம் வரை அவனுக்கு காரணம் விளங்கவில்லை. கூட்டுப்பிரக்ஞை அவனுள் வேலை செய்ய ஆரம்பித்தது. காரணம் கண்டு கொண்டான்.

அவள். அவளே தான். பெயர் ஆராய்ந்தது மனம். சாம்பவி... அவள் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவில் வர....

உடனே கைபேசியில் முகநூலில் நுழைந்து சாம்பவியின் பக்கத்திற்கு சென்று புகைப்படத்தை தேடினான்.

முகப்பு புகைப்படத்தில் சிறு மழலை சினுங்கி சிரித்தவாறு இரு வேறு பாவனையில் காட்சி அளித்தது. ஒரு நிமிடம் அச்சிறுமியை ரசித்த அவன் மனதில் பிரக்ஞை ஏவியது வந்த நோக்கத்தை.... வேகமாக அவளது புகைப்படத்தை தேடினான். அரிய பறவைகள், மலர்கள், இயற்கை காட்சிகள் தான் அவளது படங்களாக இருந்தது.

பிரபஞ்ச பிரக்ஞையில் தேடிய அவன் மனது, ஏதும் அகப்படாததால் ஏமாற்றம் அடைந்தான்.

அடுத்த நிமிடமே உபபிரக்ஞை இயங்க ஆரம்பித்தது.

இவள் எப்படி இருப்பாள்?

வகுப்பில் அப்படி அழகாய் எவரும் இருந்ததாக நினைவில் இல்லை. இருந்த ஒரே பெண் அவள்.....

"இளமஞ்சள் அவளது நிறம்
முழுப்பிறை அவளது முகம்
அடர் வனம் அவளது கார்கூந்தல்
மல்லிகை வெள்ளை அவளது கண்கள்
கூர்மையானது அவளது நாசி
கள்ளிப்பழ நிறம் அவளது இதழ்கள்
அளவான உடல்வாகு
அழகு பதுமை நதினா...."

எவரையும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க தூண்டும்.

அப்பதுமையின் பின்னால் சுற்றாத சக மாணவர்களே இல்லை எனலாம். அழகும் ஆபத்தும் இணைந்தே காணப்படும் போல, அவள் யாருடனும் அதிகம் பேசமாட்டாள். புரியாத புதிர் அவள்.

இவள் அவள் அன்று.

எந்த இருக்கையில் அமர்ந்து இருந்தால்? யார் இவளது நெருங்கிய தோழி? தோழன்?

இவள் படிக்கும் ரகமா? இல்லை படிக்காத ரகமா? படிப்பில் முதல் பத்து இடங்களில் இருப்பான் இவன். அந்த பத்து இடங்களில் இவள் பெயர் வந்ததாக நியாபகம் இல்லை. படிக்காத ரகம் எனில் தனிக்கையியலில் எவ்வாறு கடைநிலை தேர்வு எழுத முடியும். எனில் சுமாராக வேனும் படித்திருக்க வேண்டும்.

விளையாட்டில் சிறந்தவளா? இல்லை. சுகேந்தன் தடகள வீரன். ஹாக்கி மற்றும் மட்டை பந்து இரண்டும் இவனது உயிர் மூச்சு. மாவட்டம் மற்றும் நாட்டளவில் நடக்கும் தடகளப் போட்டிகளில் பதக்கங்கள் பல குவித்தவன். வகுப்பறையில் இருந்த நேரத்தை விட மைதானத்தில் இருந்த நேரமே மிகுதியானது. ஆயினும் படிப்பிலும் படு சுட்டியே சுகேந்தன்.

பள்ளியில் உடன் விளையாடிய ஒரே தடகள வீராங்கனை அவள் பெயர், பிரியா. இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறாள். இவனிடம் பள்ளியில் தைரியமாக பேசும் ஒரே ஒரு பெண் அவள் மட்டுமே. இவள் அவள் அன்று.

பேச்சாளியா? உம்மனாமூஞ்சியா? அவளாகவே தொடர்பு கொண்டிருக்கிறாள் எனில் பேசா மடந்தை அன்று. முதல் நாள் பேசும் போதே இவ்வாறு யாரேனும் வெளிப்படையாக பேசுவார்களா? இவளும் என் போன்று அலட்டல் இல்லாத பெண்ணா? இல்லை இடம் பொருள் ஏவல் அறிந்து பேசாத வாயாடியா?

எந்த ஆசிரியரின் செல்லப்பிள்ளை இவள்? விளையாட்டு அதை விட்டால் படிப்பு, வேறு சேட்டைகள் செய்வானில்லை இவன். பத்தாம் வகுப்பு வரை எவரிடமும் அடி வாங்கியதாக நினைவில் இல்லை. அதுவரை இவனோ யாவருக்கும் செல்லம் ஆயிற்றே.

யாரின் ஆள் இவள்? எந்த நண்பனும் இந்த பெயர் சொல்லி உருகியதாக நினைவில் இல்லை.

குறிப்பேதும் அகப்படவில்லை அவன் சிறிய மூளைக்கு.

பள்ளி கல்லூரி நாட்களில் பெண்கள் பால் மையலுற்று சுற்றிய சக மாணவர்களுடன் இணைந்து இருந்ததில்லை இவன். எப்போதும் எதிர் அணியில் இருப்பான். காதல் கிறுக்கர்களுக்கு இவன்பால் துவேசமே மிகிழும். வம்பளந்து கொண்றெடுப்பான், இல்லை சீண்டி சாகடிப்பான்.

இவனது குணம் கண்டு பெண்கள் அருகில் வரவே பயப்படுவார்கள். கல்லூரியில் இவனது வகுப்பில் இருந்ததே மூன்று பெண்கள். மூவரிடமும் முதல் வருடம் முடியும் வரை முகம் கொடுத்து பேசியதில்லை.

இரண்டாம் ஆண்டு செய்முறை வகுப்பில் மூன்று பெண்களுடன் இவனை மட்டுமே தனித்து விட்டு சதி செய்தார் பேராசிரியர். இன்று வரை அவருக்கு இவன் மீது என்ன கோபம் என்று இவனால் உகிக்க முடியவில்லை.

அம்மூவரும் இவனது கள்ளம் கபடமற்ற குணமறிந்து பின் வந்த நாட்களில் நல்ல தோழிகள் ஆயினர். பெண்களை இயல்பிலேயே மதித்துப் பழகும் பண்புடையவன் என்பதால், யாவொன்றிற்கும் இவன் துணை வேண்டி நிற்களாயினர். இவனோ கள்வனாயிற்றே அவர்களிடம் செய்முறை குறிப்புகளை எழுதி தரும் படி மாற்றாக வினவுவான். பெண்களும் வேறு வழியின்றி எழுதி தருவார்கள்.

யாவருக்கும் செல்லம்மான இவனை நினைவில் வைத்துக் கொண்டதில் சாம்பவியிடம் தவறு ஏதும் இல்லை.

முகநூல் மூலமாக தொடர்பு கொண்டிருக்கிறாள், நட்பை ஏற்றுக் கொண்டால், அதன் பிறகு தொடர்பு கொள்பவர்கள் மிக குறைவானவர்கள் தான்.

இவளானால் அத்தோடு நில்லாமல் குறுஞ்செய்தி வேறு அனுப்பி இருக்கிறாள்.

இவளின் தேவை என்னவோ? அப்படி என்றால் அதை கேட்டு இருப்பாள்....எதுவும் கேட்கவில்லை.

மாறாக இவனது பள்ளி வயது முகத்தை நினைவு கூர்ந்து அதைப் பற்றி சொல்லி இப்போது இருக்கும் இவன் முகத்தோடு ஒப்பிட்டு அதற்கு விளக்கம் வேறு தருகிறாள்.

கலைகளில் சிறந்தவளா? இவளது கண்கள் ஆழ்ந்து நோக்கும் திறன் கொண்டதா?

இவனது பால்ய வயது முகம், இவனே மறந்து போயிருந்தான்... பின் இவள் எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறாள்?

தன் முகம் குறித்து இவ்வளவு நினைவு கூர்ந்திருக்கிறால் என்றால் இவளிடம் நான் ஏதும் பேசியிருக்கிறேனோ? வம்பளந்திருக்கிறேனா?
நிறமென்ன?

எத்தகைய குணம் கொண்டவள் இவள்? குணவதியா? நல்ல பெண்ணா?

சாம்பவியின் முகம் காணும் ஆவல் மிகுந்தது சுகேந்தனுக்கோ.

விடையில்லா புதிராகவே இருந்தால் சாம்பவி இவன் நினைவலைகளில். இப்புதிர் பெண் இவன் வாழ்வில் எப்படி பட்ட மாறுதல்களை ஏற்படுத்த போகிறாள் என்பதை அறியாத சுகேந்தன் உறங்கிப் போயிருந்தான்.


நிகழ்வுகள் வளரும்.......

எழுதியவர் : சூரியா (26-Dec-14, 12:13 pm)
பார்வை : 147

மேலே