குழந்தையின் தாகம்

ஒருவன் தன் வயதான அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றிருந்தான். வீட்டிற்கு வரும் வழியில் அந்த முதாட்டி சொன்னார்" தாகமா இருக்கு ஏதாவது குடிச்சிட்டு போவமாப்பா ?'
ஏம்மா உனக்கு நேரம் காலமே தெரியாது உன்னை வீட்டில வீட்டுட்டு நான் ஆபிசுக்கு போகனும், டீ கடை ரெம்ப துரத்துல இருக்குமா இப்பவே லேட் ஆகிட்டு என்றான். அவன் , சரி என்று அந்த அம்மாவும் தலையாட்டினாள்.
மறுநாள் தன் மனைவியையும் கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றிருந்தான் சிறிது நேரத்தில் குழந்தை பசியில் அழத்தொடங்கியது. ஏங்க ஏதாவது டீ கடை இருக்கானு பாருங்க . பிள்ளை அழுறான் என்றாள் மனைவி, அருகில் எந்த கடையும் இருப்பதாக தெரியவில்லை. நேரமாக குழந்தை வீரிட்டு அழ தொடங்கியது, குழந்தையின் அழுகை சத்தம் இவன் நெஞ்சத்தை பதற வைத்தது, இரண்டு தெரு கடந்து சென்று பால் வாங்கி பிள்ளைக்கு புகட்டி குழந்தையின் அழுகையை நிறுத்திய பின் தான் மனைவி மன நிம்மதி அடைந்தாள். இவனின் மனசாட்சி கேட்டது "நம்மையும் இப்படி தானே வளர்த்திருப்பாள் நம் அன்னை"
#அவனவன் பிள்ளைகளை வளர்க்கும் போது தான் பெற்றோரின் அருமை தெரியும் ...........

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (26-Dec-14, 6:45 pm)
பார்வை : 267

மேலே