பருவக் காற்று
பூங்காற்றே! – திரும்பு
தென்றலாய் வீசு!
எனக்கு உலகே மறந்தாலும்,
உன் நினைவை மட்டும்
சுவாசித்துக் கொண்டே இருப்பேன்.
வாடையாய் வீசு!
பனிமழையே பொழிந்தாலும் – உன்
இதழ் தேன்மழையில் மட்டும்
நனைந்து கொண்டே இருப்பேன்.
கொண்டலாய் வீசு!
இலை கொட்டும் மரங்களும்,
என்னுள் தளிர் விடும்.
கோடையாய் வீசு!
கொதிக்கும் வெப்பத்தில் அல்ல,
உன் மூச்சுக் காற்றில்தான்
குளிர் காய்வேன்.
புயலாய் வீசினாலும்கூட
பரவாயில்லை.
புண்ணாக்கிப் போகாதே.
புண்ணாவது,
என் மனம் மட்டுமல்ல,
என் மனதில் இருக்கும்
நீயும் தான்!!!

