அன்பை பெறுவேன்

நான் என்னை அறிந்ததைவிட
நீ என்னை அறிந்தது தான் அதிகம் என நம்பினேன்
காலம் என்னை எமாளியாக்கியது...

என்னுள் உன்னை ஈடுசெய்யும் ஒருவரை
இதுவரை சந்திக்கவில்லை என் வாழ்வில்...

ஆயிரம்பேர் வந்தாலும் அன்னைக்கு ஈடாகாது
அன்னைக்கு நிகராக ஆண்டவன் கொடுத்த
அற்புத ஆத்மா நீ...
அறியாமல் உன்னை தவறவிட்டேன்...

நான் அடுத்தும் ஜனிப்பேன்,

என் அன்னைக்கு நிகராய் உன் அன்பை பெற அல்ல....
என் அன்னையாகவே உன் அன்பு முழுவதையும் பெற.....

எழுதியவர் : வினு (27-Dec-14, 2:44 pm)
பார்வை : 326

மேலே