சந்தப்பா மாமணி-2014-விருது

தோழமைகளே


வணக்கமும் வாழ்த்தும்

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக தளத்தில் "சந்தப்பா மாமணி-2014"-விருது அளிக்கப்படுகிறது.

தளத்தில் பன்வகைமை படைப்புகள் பவனி வரும் காலத்தில் எளிமையாக அன்றியும் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் சந்தப் பாக்கள் மனதின் மென்மை தளத்தில் ஒரு நர்த்தனத்தை செய்தது பலரும் உணர்ந்திருப்பர். அவ்வகையில் அப்படிப்பட்ட சந்தப் பா வகைகளாக அளித்த சிலர் "சந்தப்பா மாமணி-2014"-விருது பெறுகின்றனர்.

தோழர்கள்,

ஆசை அஜீத் (என்றும் எனது ஆசைக்குரிய திரைப்பட பாடல்களின் நடமாடும் நூலகம் இவர்!!!)

நரியனூர் ரங்கு(ஆர்பரிக்கும் சந்தங்கள் இவரின் சொந்தம் )

இராஜமாணிக்கம் (இவரின் சந்தப் பாக்கள் சிலவற்றை டோனி கிறிஸ்தோபர் தளத்தில் பதிந்திருந்தார்.எளிய நடையில் நல்ல கருத்துக்களை உள்ளடக்கியவை அவை .இராஜமாணிக்கம் அளித்த பல கருத்துக்களில் எனக்கு முரண் உண்டு என்பது தனிக் கதை.)

எழுதியவர் : அகன் (28-Dec-14, 10:20 am)
பார்வை : 163

மேலே