எழில் விமர்சன ஏந்தல்-2014-விருது

தோழமைகளுக்கு வாழ்த்தும் வணக்கமும்

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக "எழில் விமர்சன ஏந்தல்-2014" எனும் விருதை நால்வர் பெறுகின்றனர்

ஒரு படைப்பாளிக்கு ஊக்குவிப்பு உந்து விசை எனில் விமர்சனம் என்பது உயிர்சத்து .முன்னது படைப்பாளிய வளர்க்கும் ,பின்னது அவரை உலகில் நிலை நிறுத்தும் எனவே விமர்சனம் என்பது நெற்றிக்கண்ணாக இதயத்தில் இருந்து வெளி வர வேண்டும்.தனது சுய விருப்பு வெறுப்புகளின் வார்ப்பாக விமர்சன் இருத்தல் கூடாது. கலாநிதி சிவத்தம்பி...கலாநிதி . நா.சுப்ரமணியன் ..கோவை ஞானி...க. பஞ்சாங்கம்..சிகரம் செந்தில்நாதன் ..போன்ற விமர்சகர்களின் படைப்புகளை பலரும் வாசிக்க வேண்டும்.....
தளத்தில் படைப்புகளுக்கு விமர்சனம் நூல்களுக்கு விமர்சனம் என சிலர் அளித்து வருவது உவகை அளிக்கிறது. விமர்சனத்திற்கு என தனிப் பகுதியே இதற்க்காகத்தான் தளம் அளித்துள்ளது. பலரும் அங்கு சென்று வாசிக்க வேண்டும்.அங்குள்ள நூல்களை ஒருவர் வாங்கி பலரும் பகிர்தல் முறையில் வாசிக்கலாம்.

இவ்வகையில் தளத்தில் படைப்புகளுக்கு விமர்சனம் எனும் நூல்களுக்கு விமர்சனம் எனும் முறையிலும் நற்பணியாற்றி வருபவர்களுக்கு "எழில் விமர்சன ஏந்தல்-2014"-விருது
அளிக்கப் படுகிறது..


தோழர்கள்.

பொள்ளாச்சி அபி

முனைவர் வா. நேரு

ஈஸ்வரன் ராஜாமணி

இரா. இரவி

(இவரின் ஹைகூ வகைமையில் எனக்கு முரண் உண்டு எனினும் தொடர்ந்து பல நூல்கள் தளத்தில் அறிமுகப்படுத்திட இவர் தரும் விமர்சனம் பாராட்டுக்குரியது. )

கவின் சாரலன்

(இவரின் சில கருத்துக்களிலும் செயற்பாடுகளிலும் எனக்கு முரண் உண்டு எனினும் பலரின் படைப்புகளை ஆங்கில இலக்கிய மேற்கோளுடனும் அழகியல் ததும்பும் வரிகளோடும் சமயங்களில் வியப்புகொஞ்சும் படங்களுடன் இவர் தரும் கருத்துக்கள் நல்ல விமர்சனப் பார்வைக்குரியது.)

எழுதியவர் : அகன் (28-Dec-14, 10:40 am)
பார்வை : 148

மேலே