ஒரு துளி ரகசியம் -ரகு

உன்னிடத்து
மறைத்த ஒரு துளி
ரகசியம்
ஏந்தி நிற்கிறது
என் இளங்காலைக் கவிதை

எப்படி மொழிவேன்
அது எல்லோருமறிந்தக்
"காதல்"என்று

சொல்ல வருகிறேன்
சொல்ல வந்ததைச்
சொல்லாமற் புரிய
மெல்ல நகர்கிறேன்

இன்று மறைந்த
என் சொல்
நாளையுன்
வாழ்க்கையாகலாம்

இன்று மறுக்கும்
உன் சொல்
நாளையென் சபை
காணலாம்

பார்வைப் பகிர்வில்
எனக்கீடாக உன்னையே
மொழியும் என் காதல்

எப்போதேனும்
என்னையும் மொழிவதுண்டு
என்னிருப்பிடம்
நீயறியாதபோது

சமமாகவே
பாதச்சுவடுகள்
பதித்துப்போகிறோம்
என் வழியில் நீயும்
உன் வழியில் நானும்

ஆனால்
நான் மட்டுமே
யாசித்திருக்கிறேன்
உனதானக் காதலோடு
எனதானக் கவிதையையும் !

எழுதியவர் : அ.ரகு (28-Dec-14, 2:28 pm)
பார்வை : 75

மேலே