தோழியின் நட்பை தேடி

ஒற்றை நாழிகையில் ,
என் இதயம் தொட்ட உன் நட்பு ,
ஆயுள் முழுதும் உன்னுடன் நடக்க ஆவல் கொள்கிறது.
அந்த ஒற்றை நாழிகையில்,
என் நட்பு வாசலில் புகுந்தவள்,
இன்று,
வாசலின் முற்றம் மட்டுமே கண்டு,
புன்னகை பூத்து போவதில் என்னடி தோழி பயன் ????
உந்தன் நட்பின் ஏக்கம்-என்னில்
ஏன் எவ்வளவு என்று தெரியவும் இல்லை,
புரியவும் இல்லை.
ஆனாலும்,
என் மனம் காத்து கொண்டிருக்கிறது ,
உன் நட்பின் வரவேற்பை தேடி.....
வருவாயா தோழி?????

எழுதியவர் : மோகன்குமார் (29-Dec-14, 1:14 pm)
பார்வை : 200

மேலே