கயல் - என் பார்வை

பிரபு சொலொமன் இயக்கத்தில் உணரவுபூர்வமான படைப்பு .. ரத்தம் சிந்தும் வன்முறை இல்லை .. காதலை பேசும் அழகிய திரை மொழி ..
இருபது நாட்களின் நகர்வில் நாயகியான கயலுக்கும் எங்கோ சுற்றி திரியும் தேசாந்திரியான நாயகனுக்கும் இடையே ஏற்படும் காதல்,காதல் பிரிவு ,காதல் சேர்வு தான் "கயல்"
டிசம்பர் 6 தேதி 2004:(பாபர் மசூதி இடிப்பு தினம் )
படத்தின் திரை விரிகிறது..
டிசம்பர் 26 தேதி 2004:(சுனாமி பேரலை தாக்கிய தினம்)
படத்தின் திரை நிறைகிறது ...
நம் மனதும் சேர்ந்து நிறைகிறது ஒரு வாழ்கையை பார்த்த உணர்வில்...
D.இமான் இசை படத்துக்கு உயிர் ... ஸ்ரேயா கொசலின் உருக்கமான குரலில் "எங்கிருந்து வந்தாயோ" பாடல் தேன் சொட்டும் கீதம்
படத்தின் முக்கிய காட்சி சுனாமி ... சுனாமி எப்படி உருவாகிறது? அது எப்படி பயணிக்கிறது? எப்படி தாக்கிறது ? என்பதை துல்லியமாக காட்சிபடுத்தி இருக்கிறார் பரபு சொலொமன்...
மொத்தத்தில் படம் அருமை .. பொறுமை உள்ளவர்களுக்கு மற்றும் காதல் உணர்வு உள்ளவர்களுக்கு படம் பிடித்து போகும் ..