புரியாத புதிர் - உதயா

மலரும் மடிகிறது
மங்கையின் கூந்தலில்
மறுபிறவியெடுத்து
மலருவோமென
மகிழ்ச்சியில்......
பாரியோ
பயமின்றி
பறந்துசென்று மடிகிறான்
பாரியில் மறுபடியும்
பிறப்போமென நினைப்பில்........
எதோவொரு
நினைப்பில்..
மனனிறைவில்
எவை எவையோ
வாழ்கின்றன
இறைவா.......
எனக்கோ
துன்பத்தை மட்டுமே
உறவென
கொடுத்தாயே
ஏன் இறைவா????
பிறக்கும் போதே
தாயையும்
தந்தையும்
அழைத்துக்கொண்டாயே
ஏன் இறைவா????
என்னை மட்டும்
உறவின்றி
உடன்பிறந்த சொந்தமின்றி
நடுதெருவில்
தவிக்க விட்டாயே
ஏன் இறைவா??????
அழுகிறேன்
இறைவா....
மனமுடைந்தல்ல
என்னுடம் உறவாட
எந்த மனிதனின்
மனமும்
தயாராகயில்லையென
நினைத்து.....
பெயர் அறியா
ஊர் அறியா
மனிதனாக
சுற்றினேன்
இறைவா?????
வாழ்கையை
வாழ நினைதேன்
இறைவா.......
அதனால்
உழைக்க நினைதேன்
வாழ்கை கிடைக்குமென
நினைத்து...
கிடைத்தது
அனாதையெனும்
பெயரும்......
பிச்சைகாரனென
பட்டமும்....
உலகமெனும்
கல்லூரியில்......
புரியாத
புதிரான பெயர்.....
விலங்காத
விருதுதான பட்டம்......
விடையறியாமல்
அலைகிறேன்
இரவிலும்.....
இரவு பிச்சைக்காரனென
புதுப் பெயரோடு.............