அடி பெண்ணே
அடி பெண்ணே
காற்று வந்து சொன்னதா
என் காதலை
மிதக்கிறதே
இதோ காற்றில் - நீ
அனுப்பிய குறுஞ்செய்தி !
பெரிதாய்
ஒன்றும் இல்லையாம் - அதில்
பொதிந்திருப்பது என் உயிரன்றோ !
நலம் விசாரித்தாய்
எனக்கு மட்டும் ஏனோ தெரிகிறதே
நீ நலங்கு விசாரிப்பதாய் !
நாட்பட்ட காயமாய்
என் காதல் காத்திருக்க மருந்திடும்
மயிலிறகாய் உன் குறுஞ்செய்தி !
நடப்பது என்னவோ யார் அறிவார் !
நான் அறிந்ததெல்லாம்
நீ ! நீ ! நீ ! மட்டுமே !