நகைச்சுவைக்காக 2

1. மனைவி : என்னங்க, நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு இப்ப இருந்தே நகை சேர்க்கனுங்க.
கணவன் : இருக்கிற கொசுக்கடியில இது வேறயாடி. அவ இன்னும் பால்குடியே மறக்கல. அதுக்குள்ளயாடி.


2. ஒருத்தி : அந்த சாமியார் மங்களத்தை பார்த்து "மங்களம் உண்டாகாது இருக்கட்டும்னு "வாழ்த்துறாரே ஏன்?
மற்றவள் : மங்களத்துக்கு ஏற்கனவே ஏழெட்டு குழந்தை இருக்குல. அதுனால தான்.


3. அரசியல் வாதி : இந்த உதவா கரை வேட்டிய கட்டிக்கிட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை.

மனைவி : ( மனதிற்குள்) இந்த உதவாக்கரையை கட்டிக்கிட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அரசியல் வாதி : மனசுக்குள்ள நீ நினைக்கிறது தெரியுதுடி. நீ வாயைத் திறந்து பேசுறதுக்குள்ள எந்தக் கட்சியில
எப்படி ஐக்கியமாகுறேன்னு பாரு.

எழுதியவர் : ந.அலாவுதீன் (30-Dec-14, 9:13 am)
பார்வை : 176

மேலே