காரணமில்லா கணக்குகள் - இராஜ்குமார்
காரணமில்லா கணக்குகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தளத்தின் கருத்து மற்றும் மதிப்பெண் பற்றிய எண்ணம் ..விருப்பமில்லை எனில் படிக்க வேண்டாம் ...
தளத்தில் பலர் புதிதாய் இணைந்து எழுதி வருவது வரவேற்க தக்க ஒன்று ..
அதே சமயம் சிலர் வந்தவுடன் தளத்தை வெறுத்து சென்று விடுகின்றனர் ...காரணம் மனதின் எண்ணங்களே ...
எழுதுபவர் அனைவருமே அவர்களின் அதிகபட்ச முயற்சிகளோடே அவர்களின் பதிவுகளை தருவார்கள் ...
ஒருவரின் படைப்பை படித்து விட்டு நாம் தரும் கருத்துக்களே அவர்களின் அடுத்த படைப்பிற்கு ஊக்கம் ..
தளத்தில் கருத்துகளோடு மதிப்பெண்ணும் உள்ளதால் அனைவரின் பார்வையயும் அதன் மேலும் உண்டு ....காரணம் இருக்கும் ஒரு பொருளை இல்லை என்று சொல்ல இயலாது ..
பதிவினை தருபவரின் விழிகளுக்கு கருத்தும் மதிப்பெண்ணுமே விருந்தாகின்றன...
இவை இரண்டுமே எழுதுபவருக்கு தேவை ...
தனக்கு கருத்தே தேவையில்லை என்றால் அந்த பதிவினை எழுதுபவரே கருத்துரை அனுமதி வேண்டாம் என்ற நிலையோடு பதிவு செய்திருப்பார் ..
எழுதுபவர் ..பிறரின் வாசிப்பையும் கருத்தையும் எதிர்பார்த்தே தளத்தில் பதிகிறார் ..இல்லையெனில் அவர் அவரின் குறிபேட்டில் மட்டும் எழுதி மூடி வைத்திருப்பார் ...
நாம் கவிதை வாசிக்கும் பொது மனதில் ஒரு உள்ளுணர்வு ...ஒரு உள்வாங்கல் நிச்சயம் இருக்கும் ..அதை அப்படியே கருத்தாய் பதித்தால் போதும் ..
ஆனால் ..கவிதை வெகு சிறப்பு ...வெகு அருமை ...அசத்தல் என கருத்தில் சொல்லி விட்டு மதிப்பெண்ணில் ஒன்று ...இரண்டு ...என தருவது ஏன் ...???.
கவிதை சரி இல்லை ...நிறைய திருத்தம் தேவை ...அப்படியெனில் அதை கருத்தில் சொல்லி ...மதிப்பெண் ஒன்று ..இரண்டு என நாம் அளித்தால் எழுதுபவர் கொஞ்சம் முன்னேற்றம் கொள்வார் ...
ஏன் ...? கருத்தில் ஒரு முகம் ...மதிப்பெண்ணில் இன்னொரு முகம் ....
தனக்கு கருத்து மட்டுமே சொல்ல பிடிக்கும் ...மதிப்பெண் அளிப்பதில் உடன்பாடில்லை எனில் ....
எழுதும் யாருக்குமே மதிப்பெண் அளிக்காமல் கருத்தை மட்டும் சொல்லலாம் ...
ஆனால் ..சிலர் ....
நீங்கள் எப்படி எழுதினாலும் நான் ஒன்று ...அல்லது ..இரண்டு மதிப்பெண் தான் தருவேன் என்பதில் என்ன சொல்ல வருகிறோம் ...???.
சரி ...ஏதோ ஒருவருக்கு அல்லது சிலருக்கு இப்படி செய்தால் கூட ..உங்களின் எதிர்பார்ப்பு அதிகம் அதனால் இப்படி எனலாம் ...
ஆனால் இங்கு எழுதும் அனைவருக்குமே நான் ..ஒன்று ...இரண்டு தான் தருவேன் ....எனில் ...
இங்கு எழுதும் அனைவரின் எழுத்துமே மோசமா ???....சிலர் பிரமிக்க வைக்கும் எழுத்துக்கும் இதே ஒன்று ...இரண்டு ...எனில் ..என்ன நினைத்து நீங்கள் மதிப்பெண் தருகிறீர் ..
நீங்கள் கேட்கலாம் அப்போ மதிப்பெண்ணிற்கு தான் எழுதுகிறீர ?
என்று ...
இல்லை ....
அந்த மதிப்பெண்ணில் அடங்கி கிடப்பது மதிப்பில்லா ஊக்கம் ...
ஊக்கம் இல்லாமலே எழுதலாம் என நீங்கள் சொன்னாலும் ...அது அனைவருக்கும் தேவை என்பதை நீங்களே மறுக்க முடியாது ..
எழுதுபவனை ...பயணம் செய்ய வைப்பது நீங்கள் . இலக்கை காட்டுவதும் நீங்கள் ...
அதை நோக்கி செல்வது எழுதுபவரே என்றாலும் ..அழைத்து செல்வது ஊக்கம் தருபவர்களே ..
இதை மறுக்கிறேன் என்றாலும் ...நீங்கள் உணவின்றியே வளர முடியும் என சொல்வது போல் ...
பிறரின் ஊக்கம் வேண்டாம் தன்னம்பிக்கை போதும் என்றாலும் ..அந்த தன்னம்பிக்கை விதைப்பது இன்னொருவர் ...
இங்கு சார்ந்து வாழ்தல் இல்லாமல் மனிதம் இல்லை ...
சார்ந்து வாழவில்லை எனில் அந்த மனதில் மனிதமே இல்லை ..
மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக கருதாமல் தொடர்ந்து எழுதுபவரும் உண்டு ..அவர்களின் பாதை நீண்டு கொண்டே தான் இருக்கும் ...ஆனால் அவர்கள் பிறரை ஊக்குவிக்க தவறுவதில்லை ..காரணம் ஊக்கத்தின் மதிப்பை அவர்கள் நன்கு அறிவர் ...
சமூக மாற்றம் ....சீற்றம் ...அப்படி ..இப்படி ..என அதீதமாய் நாம் எழுதினாலும் ...
நம்முள் இருக்கும் இந்த சிறுமை குணத்தை கூட மாற்றி கொள்ள முடிவதில்லை ...ஏன் ???...
உனக்கென்ன இதனால் என கேட்கலாம் ....???...
ஊக்கம் கொடுக்க ஆள் இல்லை எனில் மனம் எப்படி இருக்கும் ...அந்த ஒன்று இரண்டு மதிப்பெண் வரும் போது மனநிலை எப்படி இருக்கும் என நானும் தளம் வந்த புதிதில் அறிந்தவன் ...
பின் எழுதுவதை விட அதிகமாய் கருத்தளித்து மகிழ்ந்தவன் ...
எதற்கு கருத்து உங்களுக்கு என்று கேட்டாலும் ...இங்கு உண்ணும் உணவு ...படம் ..டீ...மருத்துவம் ..அரசியல் ..கல்வி ...மது ...மாது ...பொருள் ..பெட்ரோல் ...காதல். ..கணினி ..இதற்க்கெல்லாம் நீங்கள் ஏன் கருத்து சொல்கின்றீரோ அதே காரணம் தான் இங்கும் ..
சிலர் கருத்து சொல்லி தான் பிறர் கருத்தை பெற வேண்டுமா என்றலாம் ...
சரி ..உங்கள் பதிவிற்கு மட்டும் கருத்தை மட்டும் எப்படி எதிர்ப்பார்ப்பு உள்ளது ...கொஞ்சம் யோசித்தால் எல்லாமே புரிதல் சார்ந்தது ...
உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லி விடுங்கள் .ஏன் கருத்தில் ஒன்றும் ...மதிப்பெண்ணில் இன்னொன்றும் ...
- இராஜ்குமார் ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை ...எனக்கு தெரிந்து சில நல்ல படைப்பாளிகள் இந்த ஒன்று இரண்டு மதிப்பெண் ..மற்றும் கருத்தினாலும் ..தளத்தை வெறுத்து பின் விலகி சென்றதால் இதை பதிவு செய்தேன் ..