தீவிரம்

கடைசியில்
சிலுவையில் இருந்து
இறங்கி வர
சம்மதித்த நான்
யாரென
நீங்களே சொல்லுங்கள்...
இடது பக்கம்
அல்லது
வலது பக்கம்
இருக்கும் திருடர்களில்
ஒருவனாக இருக்கவும்
சம்மதமே....
இன்னும்
ஒரு சம்மதத்துக்கும்
மதம்
பிடிக்காமலிருக்க
சிலுவையாக
இருக்கவும் சம்மதமே....
இங்கே
சுமந்து கிடக்க
அன்பைத் தவிர
தீவிரம்
வேறொன்றும்
இருப்பதாக தெரியவில்லை....
எல்லா சிலுவையும்
சிலுவையாகாது.....
கவிஜி