இதயத்தோடு இணைந்துவிட்டேன் - உதயா

கல்லூரி காலங்களில்
முன்னிருக்கையில்
அமந்துக்கொண்டு
நீ
பார்த்த பார்வையில்
புல்லின் நுனி
பனிதுளியாக
உருகிபோனதடி
மனது...........
மண்ணை மிஞ்சும்
கடலானது
நான்
உன்மேல் கொண்ட
அன்பு...............
கண்கள்
நோக்கும் திசையெங்கும்
உந்தன் முகம்தானடி........
சாலையோர
இருக்கையில்
நான் அமர்ந்திருந்தபோது
என்மீது
தென்றல் தொடுத்த
அன்பு போர்கள்............
உன் தாவனி
என் முகத்தை
கொஞ்சிப்பேசிய
சமாதானங்கள்.....
உன்னை களவாடி
என் இதய
ஊஞ்சலில்
தாலாட்டினேனடி
என்னையறியாமலே.......
உன் அன்புக்கு
அடிமையாகி
காலோடு பினைந்துகொண்டதடி
காலணியே.........
நான்னென்ன
சாதாரண மனிதன்தானடி...
இணைந்துவிட்டேன்
உன்னிதயத்தோடு....
கலந்துவிட்டேன்
காதல் உணர்வோடு..........