சுடுகாடு செல்லும் வரை

காதலிக்கிறேன் என்றேன் நான்
கடும் சொல்லால் என்னை நீ
கடுமையாய் பேசி விட்டாய்
சுடு சொல்லால் என்னை நீ
சுட்டே தள்ளி விட்டாய்..

கடைசி வரை நீ மட்டும்
எனக்கு தான் நீ வேண்டும்
சுடுகாடு செல்லும் வரை
விட மாட்டேன் உன்னை நான்
கண்டிப்பாய் சொல்லி விட்டேன்.

கடும் சொல்லும் சுடு சொல்லும்
என் உள் மனதில் இருக்கிறதே
புண்ணாய் வலிக்கிறதே
உன்னை காதலித்தே கல்யாணம்
முடித்திடுவேன். முடிவாய் நான்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Dec-14, 12:36 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 153

மேலே