என் பெயர் குருதி

..."" என் பெயர் குருதி ""...

புரண்டோடும் அருவியாய்
எண் சாண் உடம்புக்குள்ளே
என்னுடைய ஓட்டம்
என்னுடைய பாசமே
உலகில் முதன்மையானது,,,

சுத்தம் அசுத்தமென்னும்
நான்கு அறைக்கு சொந்தக்காரன்
உன் மூளையை உயிர்ப்பிக்க
நாடி நரம்புகளில் பயணித்து
நானிருப்பேன் துணையாக,,,

மனிதனொன்று செயல்வேரென
என்னுறவை வெளியாக்கி
உயிர் மாய்ப்பவருமுண்டு
உயிர்வாழவைக்க பிறலுடல்
எனை சேர்ப்பவருமுண்டு,,,

தேக சூட்டை சூடாக்கி
என்னை இயக்கிக்கொண்டு
உன்னையும் இயக்குகிறேன்
உயிருனை பிரிந்திட
உறைந்து நான் போவேன்,,,

வெள்ளை சிகப்பென்றே
இனபேதங்கள் எனக்குள்
இருந்தாலும் என்றுமே
நல்லவன் கெட்டவனென்ற
போதங்கள் இல்லாதவன்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (31-Dec-14, 10:58 am)
Tanglish : en peyar kuruthi
பார்வை : 415

மேலே