நன்றி பதினான்கே

பதினைந்து பூத்திட பாதை விடுத்து
பதினான்கே சிட்டாய்ப் பறந்தாய் -அதிசயம்
என்னுள் நிகழ்த்தினாய் ஏற்றந்தந் தாயுன்னை
நன்றியுடன் வாழ்த்துவேன் நான் .
பதினைந்து பூத்திட பாதை விடுத்து
பதினான்கே சிட்டாய்ப் பறந்தாய் - விதிப்படி
சோதனைகள் வாட்டிடினும் சோராது காத்தாய்நீ
சேதமின்றி, நன்றி யுனக்கு !