விழி வழி பயணம் எழுதி வெளியிடாத என் புத்தகத்தில் இருந்து

பரீட்சைகள் முடிகின்றது
திரும்புகின்றோம்
பேருந்துக்காய் காத்திருக்கும்
எம் சாலையில்
இன்று
பேருந்து காத்திருக்கின்றது

ஜன்னல் ஓரமாய்
இருக்கை
தலைசாய வசதி
ஆசனம் நிரம்ப சனம்
ஜன்னலோர கம்பிகளை
இறுகப்பிடித்து
இருக்கையின் ஓரம் சரிகிறது சிரம்
சில தரிப்புகள் தாண்டுகின்றன
விழித்துப் பார்கின்றேன்
நிலைக்குலைய செய்கிறது மேனி

என் வெள்ளைச்சட்டையில்
ஓர் வர்ணப்பட்டாம்பூச்சு
என் தோலில் தலைச்சாயித்து
விழிகளை இளைப்பாற்றுகின்றது

இரவெல்லாம் விழிகள்
விடைத்தேடலில்
களைத்தது போலும்

சுற்றிலும் பார்த்தேன்
ஒரு நண்பன்
நா எதையும் பாகலப்பா ......
மற்றவனோ
பார்த்தாலும் சொல்லாமட்டோமே !
என நகைத்தனர்

தொட்டுவிட தயக்கம் கொண்டு
மெதுவாய் தட்டி எழுப்பினேன்
திடுக்கிட்டு கண் சிமிட்டினாய்
முதல் முறை
ஆயிரம் விண்மீன்கள்
மலர்ந்து உதிர்கின்றது
பகலில்

தூக்கமா என்றேன்
மொழிகள் இல்லை
அவளின் காதோரக் கம்மல்கள்
தலையாட்டி
மௌனத்தை மொழிப்பெயர்கின்றன

என் இடத்தை தரவா என்றேன்
நான் இருக்கையை சொன்னேன்
தவறுதலாக புரிந்துக்கொண்டன
போலும் நம் இதயங்கள்
இடமாறிவித்டதே!

சற்று நேரத்தில் இறங்கினேன்
எதோ ஓன்று குறைகிறது
பேருந்தில் எதைத் தவறவிட்டோம்
என சிந்திக்கும் வேளையில்
ஜன்னலுக்கு வெளியே
தலை நீட்டி என்னை பார்த்தபடியே
நகர்கின்றது
என் இதயம்

உன் விழிகளை பார்த்துக்கொண்டே
என் கண் தானம் செய்கின்றது
உயிரை
என் கன்னி கவிதையை இப்படி எழுதி
நான் உயிர்த்தேன் அன்று
அது உனக்காய் இருக்கும்
நீ விடச்சொல்
உயிர் காலில் கிடக்கும்


சாலைகள் சோலைகளாக
வண்டு போல் வட்டமிடுகின்றேன்
உன்னை
என் பார்வை உன் மீது
உன் பார்வை மண் மீது
உன் கால்கள் நகர்கின்றது
என் பார்வை தொடர்கின்றது

தொடரும்...........

எழுதியவர் : உமா சங்கர் (31-Dec-14, 11:50 am)
சேர்த்தது : umashangar
பார்வை : 95

மேலே