ஒரு மன்னனாக

மக்களாட்சியில் ..நானும்
இந்நாட்டின் மன்னனாக
இதய ஓட்டத்தின்
எண்ண வியர்வைகளை
எண்ணிப் பார்த்தேன் ..
ஒவ்வொன்றும் சொன்னது..
ஒரு தனிக்கதை..!
ஊழல் பெருச்சாளிகளை
வலை வைத்து பிடித்து
எரி நெருப்பில் போட்டிடவும் ..
வன்கொடுமை புல்லர்களை
நடு வீதியில் வெட்டிடவும்..
கர்ம வீரர் வழி நடக்க
திறனுடையோர் தமை காட்டிடவும்..
மதவெறியால் மதி இழக்கும்
மாந்தரை மாய்த்திடவும்..
ஏழ்மை இல்லா நிலை கொணரும்
அரசாங்கம் அமைத்திடவும்
மனசாட்சி துணை கொண்டு
மாண்புடனே சகாயம் செய்யும்
மாமனிதரை போற்றிடவும்
மன்னனாக மனதுக்குள்
ஆசைப்பட்டேன்!