புத்தாண்டு - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சூரியன் சுற்றிச் சுற்றிச்
.....சுழலுமிப் பூமிப் பந்து
நேரும்தன் ஒருநீள் வட்டப்
.....பாதையில் புதிய சுற்றைச்
சீரொடு தொடங்கும் நன்னாள்
.....சிறப்பெலாம் சேர்க என்றே
கோரியாம் களித்து வாழ்த்து
.....கூறினோம்; வாழ்க! வாழ்க!

[விளம் மா மா] என்ற அரையடி வாய்ப்பாடு.

சூரியனைச் சுற்றிச் சுற்றிச் சுழலும் பூமிப் பந்தானது தனது தனித்தன்மையான (ஒரு = தனித்தன்மை) நீள்வட்டப் பாதையில் ஒரு புதிய சுற்றில் நுழைகிறது, அந்த நுழைவு நாளே புத்தாண்டு, அது சீரொடும், சிறப்பெல்லாம் சேர்வதாயும் அமைக என்று யாம் கோரினோம் (வேண்டினோம்!) வாழ்க! வாழ்க!

எழுதியவர் : விஜயநரசிம்மன் (31-Dec-14, 6:01 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 592

மேலே