என் மலர் மேடை
கண் இமைக்கும் நொடிகளை
தந்து விட்டு............
கண் இமைக்கா நொடிகளை
எடுத்து கொண்டு ...........
நிற்பனோ
அங்கும் இங்குமாய்
அலைந்து திரிந்து .........
பனியெனவும்
மழையெனவும் காணாது
உன் நினைவு ..............
மரித்து போய்
நடு நிசி எனவும்
பகல் எனவும்
பாராமல் .............
என்னை சுற்றும் உலகமே
நீ
என எண்ணி .............
ஒரு
கணம் கூட
என் நினைவு உன்னை
தொட்டு விடாதா என்று .........
என் இதயத்தை
கசக்கி பிழிந்து
என் கல்லறையின்
மண மேடையில்
என் இதயத்தை
அமைதி படுத்தினேன்.........
என்றாவது ஒரு நாள்
என் மலர் மேடையை
காண நீ வருவாய்
அன்று வரை
என் இதயம் உறங்காது
என் கல்லறையில் .............