புத்தாண்டு பரிசு

"நண்பா..."ஐ" படத்தோட டிரைலர் பார்த்தியா?
இல்லையே..!
அப்பாடா...!
ஏண்டா கேட்குற..?
அது ஒண்ணுமில்லடா...நீயும் நடிகனாகனும்னு ரொம்ப நாளா ஆசைபட்டுகிட்டு இருந்தீல்ல...அதுக்கேத்த மாதிரி ஷங்கர் சார் ஆப்பிரிக்கா மொழியில இந்த "ஐ" படத்தை எடுக்குறதுக்கு ஹீரோவை தேடிகிட்டு இருந்தாரா...நான் போயி உனக்கு அந்த சான்ஸை வாங்கிட்டு வந்திருக்கேன்டா...
(நண்பன் கண்கலங்கிக் கொண்டே..)
டேய்...எப்படிடா...எப்படிடா... சான்ஸ் கிடைச்சிச்சு...
ஒரேஒரு உண்மைய சொன்னேன்டா மச்சான்...
என்னடா அது ?
ஷங்கர் சார்ட சொன்னேன்.. "சார்..விக்ரம் சாருக்கு நீங்க மேக்கப்பெல்லாம் போட்டு நடிக்க வச்சுருக்கீங்க...ஆனா என் நண்பனை நடிக்க வச்சு பாருங்க..
மேக்கப் போடவேண்டிய அவசியமே இருக்காதுன்னு சொன்னேன்! அவ்வளவுதான்...மனுஷன் ஆச்சரியப்பட்டு போயி உனக்கு சான்ஸை குடுத்துட்டாரு...!
(மீண்டும் நண்பன் ஆனந்தக் கண்ணீரோடு...)
என் மேல அவ்வளவு நம்பிக்கையாடா உனக்கு...!
பின்னே....நன்பேண்டா...!