முடிவைத்தேடும் உழவன் - உதயா

மாதம் மும்மாரி
கார்முகில்யன்னை
பாலூட்டி
தன் பிள்ளை
தானியத்தை
பக்குவமாய்
வளர்த்தெடுத்தால்..........

பெற்றெடுத்த
பிள்ளையை
சீறாட்டி தாலாட்ட
உழவனை தாயாக
படைத்தும்
வைத்தால்.......

பெறாத
ஆயிரமாயிரம்
பிள்ளைகள்
உணவருந்த
ஈன்றெடுத்த
பிள்ளையையே
மடிய வைத்தால்...........

வளர்த்தக் கடா
மார்பில் பாய்வதைப்போல்
வளர்ந்தெடுத்த பாவியான
மனிதன்
வயிற்றில் பாய்ந்தான்............

அன்னையின் கருவறை
அறுப்பதை போல
விவசாய நிலங்களை
மனிதன்
மாய்த்து மாடியாக்கினான்

நிலமெல்லாம் வீடானது
வீடெல்லாம் பணமானது
உழவனின் வயிறோ
கருகியேப்போனது.............

வளர்த்தெடுத்தப்பிள்ளை
தன் கருவறையை
அறுத்தடுத்த கோவம்
அன்னையவளுக்கு............

தன்னால் படைத்தெடுத்த
உழவன் பிணத்தைப்பார்த்தும்
கண்ணீர்சிந்த மறுக்கிறால்..........

தன் கருவறையை
அறுத்தது போதாதென்று
மீத்தேன் திட்டம்மெனகூறி
மனிதன்
என் இதயத்தையே
எரித்துவிட்டான்............


கோவத்தின்
உச்சத்திக்கே சென்றுவிட்டால்
நீரன்னை.........

அவள் படைத்தெடுத்த
உழவன் மடிவதைக்கண்டும்
கண்ணீர் சிந்த
மறுத்துவிட்டால்............

தனக்கு உணவளித்த
உழவன் மாய்வதை
அறிந்தும்
ஏதும் அறியாததைப்போல
மனமிறங்க மறுக்கிறான்
மனிதன்................

வாழவழின்றி
முடிவைதேடும்
உழவனுக்கு
மரணம் முடிவானது...............

முடிவின்றியே
தொடரும்
பல உழவனின்
கதறல்கள்.......
சில உழவனின்
மரணங்கள்............

கல்லறைக்கும்
போகும் உழவனுக்கும்
கண்ணீர் அஞ்சலி
செலுத்த மறுக்கிறான்
மனிதர்கள்.............

முடிவைத்தேடியே
அலைகிறேன்
நானுமொரு
உழவனாக..............

எழுதியவர் : udayakumar (1-Jan-15, 7:43 pm)
பார்வை : 389

மேலே