ஆண்டா ஆண்டவனா

ஆண்டாக வருகின்றாயா?
ஆண்டவனாக வருகின்றாயா?
நான் உன்னை
ஆண்டவனாக வரவேற்கின்றேன்.

பிரம்மச் சுவடியின்
பிரம்ம ரகசியங்களை
பிரம்மிக்க வைக்க நீ
புறப்பட்டு வருவதால்
நான் உன்னை
ஆண்டவனாக வரவேற்கின்றேன்.

ஆண்டுதோறும் நீ
அடியெடுத்து வரும்போது - சில
ஆபத்தையும் விளைவிக்கின்றாய்.
ஆனந்தத்தையும் விவரிக்கின்றாய்.

ஆனந்தத்தை விட
ஆபத்தின் பக்கங்கள்தான்
அதிகமாகக் கொண்டுவருகின்றாய்.
அதனால்தான் மனிதர்கள்
ஆண்டவனின் கோயிலில்
ஆழமானப் பிரார்த்தனைகளை
ஆண்டுதோறும் முதல்நாளில்
அரங்கேற்றி வருகின்றான்.

வேடிக்கை இதில் என்னவென்றால்
வஞ்சிப்பவர்கள்தான் - புத்தாண்டின் முதல் நாளில்
வரம் கேட்டு - ஆண்டவனுக்கு
விளக்கேற்றி வழிப்படுகின்றான்.
இவன் ஆண்டுதோறும்
வஞ்சனையை நெஞ்சுக்குள்
வளர்த்து, வாழ்த்துக்களை
வாயார அள்ளி வீசுகின்றான்.

உறைக்குள் நுழைந்தக் கத்தி
உறையையேக் கிழித்தாற்போல்
இறைக்குள் நுழைந்தப் பக்தி
இறைவனையேக் கல்லாக்கி விடுகிறது.

இந்தக் கல்லானது ஒருநாள்
இதயமற்ற வஞ்சனையாளனை
இல்லாமல் செய்யப் போகிறது.-அது
ஆண்டாகப் பிறக்கின்ற நீயாகிலும்
ஆண்டவன் நின்றுக் கொல்வான் என்பதை
அழித்துக்காட்டு. - தர்மம்
அழுவதை நிறுத்திக்காட்டு.-அதர்மம்
தொழுவதை தட்டிக்காட்டு.

மனிதனின் தலையெழுத்தை
மலருகின்ற உன் எழுத்தால்
மட்டமானவர்களை
மறித்துக்காட்டு.

ஆண்டுதோறும் நான் உன்னையே
ஆண்டவனாகப் பார்க்கின்றேன்.-எனக்கு
ஆதரவாய் நீ வளர்ந்துக் காட்டு.

ஆண்டே! நான்
ஆண்டவன் கோயிலில்
ஆண்டவனை நாடுவதில்லை
ஏன் தெரியுமா? - எனக்கு
ஆண்டவனே நீதானே. - நீ
ஆளவரும்போது - அந்த
ஆண்டவனின் திருவிளையாடலாய்
உனது நாட்களில் அல்லவா
உன்னிப்பாக கவனிக்கின்றேன்.

புத்தாண்டாய் வந்தவுடன்
பொங்கலாகவும் வந்து
பொங்கவைக்கின்றாய் - பின்
புலம்பலையும்
பொங்கவைக்கின்றாய்.-நீ
ஆண்டா? ஆண்டவனா?
ஆண்டவனாகவே
அவதரித்துவா . - எங்களின்
அவலங்கள் மறிக்கவே
அவதரித்துவா

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (2-Jan-15, 5:44 am)
பார்வை : 95

மேலே