நாய் வால்

நரி வேல நாசக்காரங்க!
நாட்டுலதா இருக்குறாங்க!
நட்புபேர சொல்லி அவங்க,
நன்றிதானே மறக்கராங்க!

உண்மை சொல்ல கூசுவாங்க!
உணர்வு மதிக்க தயங்குவாங்க!
உள்ளத சொன்னா உதைப்பாங்க – அத
உரைக்க சொல்ல வந்தேங்க!

பணம் பார்த்தா பக்குவமாய் பேசுவாங்க!
பணஏப்பம் விட்டு ஏளனமா பார்ப்பாங்க!
பசிவந்தா பத்தும் போயிருங்க – அவங்க
பசி, பணம் வந்தா போயிருங்க!

திருடிசேர்த்து வைப்பாங்க – அத
திறைமைனு எண்ணி திளைப்பாங்க!
திருத்தவழி சொல்லுங்க – இவங்க
நிமிர்த்த முடியா வாலுங்க!
நாய் வாலுங்க!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (2-Jan-15, 3:11 pm)
பார்வை : 239

மேலே