இசை

ஆரவார ஆகாய அதிர்வால்
அலைமோதி அல்லாடி
அருகில் இருப்பவரின் அடிசெவியை எட்டி
எரிச்சலுட்டும் வானொலி "இறைச்சல்"
அடுத்த வேலை உணவுக்கு
அடுத்தவரின் கையை நாடும்
அகதியான அப்பாவி கிழவனின் "புலம்பல்"
வேலை வெறுப்பால் நிம்மதியின் நிறம் தேடும்
நிரந்தரமற்ற மானிடரின் மறுபேச்சை கேட்க வேண்டி
வெற்று பையில் கிடக்கும் வெள்ளை தொலைபேசியை நோக்கி
விரையும் அழகற்ற "அபாய ஒலி"
கற்றது கடக்க உற்ற தோழனின் உடன் சேர்ந்து
சுற்றம் மறந்து சுவைத்து கொண்டே
மற்றவை மறந்து கடந்து வரும்
மழலை கூட்டம் கொடுக்கும் "கூச்சல்"
இவையனைத்தும் "இன்ப இசையாகி ஒலிக்கின்றன" .....
நெரிசல் நிறைந்த நெடுஞ்சாலையின்
மறுபக்கமுள்ள மடத்தை அடைய
கனிவுள்ள கரம் தேடும்
"கண்ணில்லா கன்னியின் காதுகளில்"
###########################################