இறைவனின் சேயான இவள்
தங்க ரதமே !
பேரழகி உன் சிரிப்பால்
ஒரு படி உயர்ந்து செல்கிறாய்
பல மனதை வெற்றி கொண்டு
இதயத்தில் இடம்பிடித்ததால் ~~~~~!
ஒப்பற்ற உன் உள்ளம் தான்
உப்பற்ற மனித வாழ்வை
சுவைக்கச் செய்கிறது
சுதந்திரமாய் வாழ ~~~~~~~~~~~~~~~!
உன் கள்ளப் பார்வையில்
உச்சியும் குளிர்ந்து
உதிரமும் சிவந்து
திருப்தி அடைகிறது -உன்னிடம்
திருடு போன மனமும்~~~~~~~~~~~!
உன் பேச்சும் விடியலை
துயில் கொள்ள வைக்கின்றது
மிகவும் சுலபமாக
தென்றலை வருடிய படி~~~~~~~~~!
ஏகாந்த வாழ்க்கையும்
வீண் தான் இவளைப் போன்ற
கொடி முல்லையின்
செல்லக் கொஞ்சலுக்கு முன் ~~~~!
எழில் மிகு இவள் நடை
எண்ணங்களை இவளுக்காய்
இணங்கச் செய்கிறது
புது உத்வேகம் கொண்டு ~~~~~~~~~!
இவள் குறும்புகளும்
கரும்பாய் இனிக்கின்றது
புலமை பெற்ற -இவள்
வெளிப்படையான செயலில்~~~~~~!
பரிமளமாய் அமைதியும்
அழகைக் கூட்டும் அளகமும்
பகைவனை புன்னகையால்
தளர வைக்கும் இதழும்
குழந்தை இவளின் தற்பாதுகாப்பு ~~!
இன்பங்களை ஒளிரச் செய்கிற- இவள்
வாழ்வில் மேற்கில் தானோ -கதிரும்
உதயமாகின்றது கடவுளின்
உத்தரவுப் படி தேய்ந்து ~~~~~~~~~~~!
நற் குணம் கொண்ட குழந்தையாய் "இவள்"
தன் ஆயுளை தெரிந்து கொண்டால்
கடவுள் உருவான வைத்தியரின்
"புற்று நோய் "என்ற வார்த்தை அறிந்தும்~!
கள்ளம் கபடமில்லாமல்
செதுக்குகின்றால் பிறர்
வாழ்வில் மகிழ்ச்சியை
இறைவனின் சேயான
இவள்~~~~~~வாழும் வரை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!