காதல் வலி

ஒவ்வொரு இரவும்
கனத்த மனதுடன் தான்
உறங்கச் செல்கிறேன்
உன் காதலை சுமப்பதினால் .......

உன் நினைவுகளில்
முழ்கிய நான் உறங்குவதற்குள்
விடிந்தும் விடுகிறது பொழுது ........

காதலினால்
கரைந்த பொழுதுகள்
இப்பொழுது என் கண்ணீரால்
மட்டுமே கரைகின்றது ..........

உன் கவிதைகளில்
வலம் வந்த நான்
இன்று காணாமல் போய்விட்டேன் .........

முத்தங்களில்
பரிமாறிய உன் சுவாசம்
என் நெஞ்சுக்குழியில்
பாறையாய் கனக்கிறது ............

என் ஒவ்வொரு நாளும்
உனக்கான காத்திருப்புகளாய் ..........

தாயைத் தொலைத்த
குழந்தை போல் தவிக்கிறேன்
எனக்காய் வந்து விடு............

எழுதியவர் : kannama (3-Jan-15, 12:05 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 122

மேலே