துடிக்கும் உன் தாய் இதயம்

(இந்த கதை என் பாட்டி எனக்கு சின்ன வயதில் சொன்ன கதை, ஒவ்வொரு முறையும் இந்த கதை என் தாயின் அருமையை எனக்கு உணர்த்தும் கதை...என் பாட்டியின் நினைவுகளில் ...)



கண்கண்ட தெய்வம்மா நீ எனக்கு
கடவுளென்று மற்றொருவன் எனக்கெதற்கு ??
கவிதையொன்று வார்தேடுத்தேன் -இன்று உனக்கு
எட்டிடுமோ கல்லறையில் உறங்குமுன் செவிகளுக்கு
தந்தையை நான் கண்டதில்லை -அவர்
மந்திரத்தையும் நான் கேட்டதில்லை,
நான் கண்ட இடமெல்லாம் நீக்கமற நின்றாயே !!
இன்று என் கனவுகளில் மட்டும் வந்து செல்கிறாயே -ஏன் அம்மா ??

பருவத்தில் தான் உன் போதனைகள் கசந்தனவே
இன்று காலம் சென்ற பின் புரிகிறதே - ஐயோ!!
கண்கலங்கி கல்லூரிக்கு உன்னை பிரிந்து சென்றபோது
நான் அறியேன், ஒரு நாள் -உன்னை
கலங்க வைத்து விட்டு, காதலியுடன் ஓடிவிடுவேனென்று
அன்று உன்னை பிரிந்து சென்ற தூரம் பெரிதாய் தோன்றவில்லை
அனால் இன்று இந்த நிசப்தம் தான் -என்னை வாட்டுகிறதே !!

ஊர்விட்டு வந்தபோது திருமணத்தில் -இணைந்தோம்
சில நாளில் காதல் என் ஜன்னல் வழியே சென்று மறைந்தது,
சல்லாபம் நீங்கி ,சாபமேன்றனது
பெற்ற வயிறை எரியவிட்டு, பெற்றெடுக்க பார்த்தேனே -ஐயோ !!
போதி மரத்தை தான் வெட்டிவிட்டு புத்தனாக பார்த்தேனே !!
என்னவளை மலடியென்று ஊர் பழிக்க
பரிகாரமொன்று உண்டென மந்திரத்தான் சொல்ல
பலிபொருள் யாதென்றால் " துடிக்கும் உன் தாய் இதயம் "

"வேறு வழி இல்லை அன்பா " என்றாள் - என் நீலி
கம்பனும் ஏமாந்த இடம் , நான் மட்டும் எம்மாத்திரம் ??
தடுமாறி தான் போனேன் , தவறு செய்ய தான் துணிந்தேனே
என்னவளே!! என் உருவானவளே!! என்ன காரியம் செய்தேன் உனக்கு ??
என்னக்காய் பால் சுரந்த உன் மார்பை நானே கிழித்தேன்
எனக்காக தான் துடிக்கிறது என்று தெரியாமல்
உன்னிடம் இருந்து இதயத்தை பிடுங்கி எடுத்தேன் !!

ரத்தம்!! நான் வளர்ந்த வீடெங்கும் !!
நீயோ கதறவில்லை, மாறாய் பாசத்துடன் புன்னகைத்தாய் !!
உன் ரத்தமும் என்னை நோக்கி வழிவது ...என்னை அனைக்கதானோ ??
என் வீட்டை நோக்கி ஓடினேன்
அப்போதும் எனக்காய் தான் ஆண்டவனிடம் அழுது கொண்டிருந்தாயோ ??
என் மிருகம் நீங்க, மகன் என்னுள் விழித்துக்கொண்டு கதறிகொண்டிருகிறேன் !!
தெருவெங்கும் உன் முகம் !! ஆரண்டு போய் வீட்டை நோக்கி ஓடினேன்
முற்றத்தில் தடுக்கி விழுந்தேன், உன் இதயம் கை நழுவி அசைய
அது பதறிபோய் சொன்னது,
" மகனே! பார்த்துபோ !!"

எழுதியவர் : நிரந்தரமானவன் (3-Jan-15, 10:45 am)
பார்வை : 832

மேலே