நீலக்குயில் தேசம்19---ப்ரியா
ராஜலெட்சுமியும் சுசீலாவும் இருவரின் குடும்ப விஷயங்களைப்பற்றியும் அப்பா அம்மா ஊர் விஷயங்களையும் பேசிகொண்டிருக்கும்போதே நேரம் போய்க்கொண்டிருந்தது அதன் பிறகு சுசீ ப்ரியதர்ஷினி மற்றும் மதனிடமும் பேசிவிட்டாள்.......தங்கை ப்ரியா கிண்டலடித்த காரணத்திற்காகவோ என்னவோ கயலிடம் மட்டும் ஏனோ மதன் பேச விரும்பவில்லை ஆனால் மனது கயலிடம் பேச ஆசைகொண்டது அதுமட்டுமல்ல கயலையும் தன் தங்கையையும் ஒருமுறையாவது சேர்த்துப்பார்க்கவேண்டும் என்ற பேராசையும் மனதில் ஒரு ஓரம் இருந்தது.
முதல் முதலாக இருக்குடும்பத்தாரும் பேசிக்கொண்டதில் சுசீலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி எப்படியாவது மாமாவையும் அவர்களுடன் சேர்த்து வைக்கவேண்டும் என்பதே சுசீலாவின் எண்ணமாக இருந்தது......சுசீலா மட்டுமல்ல அனைவருமே அதைத்தான் விரும்பினர்.
வீட்டை விட்டு போன மட்டும் ராஜலெட்சுமி இப்போது சந்தோஷமாக இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் சுசீலா.
இளவயதிலேயே தன் அண்ணனின் பிரிவை நினைத்து வருத்தப்பட்டாள் ராஜலெட்சுமி.
எப்போது எப்படி நம் குடும்பத்தை சேர்ப்பது எப்போது இரு குடும்பங்களும் சந்திக்கும் இதற்கு என்ன வழி என்ற யோசனையில் கயல்விழி ப்ரியதர்ஷினி மற்றும் மதன் கூடவே அரவிந்தும்.......
இந்தவருட இடைவெளியில் கயல் தனது கனவை மறந்திருந்தாலும் தாத்தா மறுப்பதாக இல்லை அவரது மனதில் கயலைப்பற்றிய யோசனைகள் தான்........எப்படியாவது கயலுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் அவளுக்கு எந்த கெடுதலும் வந்திரக்கூடாது என்று எப்பொழுது கயல் நினைவாகவே இருப்பார் தாத்தா.......மறுபடியும் ஒருமுறை சாமியாரைப்பார்க்க தனியாக செல்லவேண்டும் என்று நினைத்தார் அவர்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க நாளை கல்லூரி திறக்கும்நாள் தன் காதலனைப்பார்க்கும் ஆசையோடு அன்றைய இரவுப்பொழுது இதமாய் நகர்ந்தது காலையில் வழக்கத்தைவிடவும் அதிவேகமாக எழும்பி தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு தோழிகளுடன் விரைவாய் புறப்பட்டாள் கயல் இந்த விடுமுறை நாட்களில் நடந்த நிகழ்வுகளை மூவரும் பரிமாறிக்கொண்டனர்.
ராகேஷும் கயலும் சந்தித்த போது அந்த டிரெயினிங் ஆசிரியர் பார்த்ததையும் முறைத்ததையும் கயல் தோழிகளுக்கு சொல்ல.........என்னடி இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு இப்டி சந்தோஷமா இருக்கா கொஞ்சம் கூட பயமே இல்லியா என ஷீபா கேட்டாள்?
எதுக்குடி பயப்படணும் என் வாயால சொல்றதுக்க முன்னாலேயே அவனாவே கண்டுபுடிச்சிட்டான் அத நினச்சி சந்தோஷப்படுவியா அதைவிட்டு பயப்பட சொல்றா என்று கலாய்த்தாள் கயல்.........கயல் சொல்றதும் ஒருவிதத்துல நல்லதுதான் என்பதை புரிந்துகொண்டாள் ஷீபா....!
கல்லூரிக்கு சென்றதும் முதலில் திவ்யாவை சந்தித்து பேசிவிட்டு ராகேஷை பார்க்க ஆவலாய் வந்தாள் கயல் ஆனால் ராகேஷ் இன்னும் வகுப்பிற்கு வராமல் போனது இவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.......வாசலில் யார் வந்தாலும் இவள் கண்கள் நோக்க ஒவ்வொரு முறையும் ஏமாற்றமாய்தான் இருந்தது.
நேற்று அவ்ளோ நேரம் போனில் பேசிய பிறகும் வரமாட்டேன்னு சொல்லலியே என்று மனதிற்குள் நினைத்தாள் கயல்..........கயலின் வாடிய முகத்தை பார்த்த தோழிகளுக்கும் வருத்தமாக இருந்தது காதல் பிரிவின் வலி அவர்களுக்கும் தெரியாமல் இருக்காதே....?
ராகேஷ் இல்லாமல் போனது கயலுக்கு மிகுந்த வேதனை அளித்தது அவன் இல்லாத அந்த இடத்தில் அவளாலும் இருக்க முடியவில்லை எப்படியோ மாலைவரை முடித்துக்கொண்டு சோர்வாய் கிளம்பினாள் கயல்.
நாளைக்கு கயலுக்கு பிறந்தநாள்........அட்வான்ஸ்டா தோழிகள் வாழ்த்து சொல்ல அப்பொழுதுதான் தனக்கு நாளை பிறந்தநாள் என்பதே கயலுக்கு நினைவுக்கு வந்தது.....நாளைக்கு கயலுக்கு 19-வது பிறந்தநாள். தோழிகளின் வாழ்த்தில் பரவசமானாள் கயல்.
நாளைக்கு "swiss baker"ல எங்களுக்கு டிரீட் வேணும் என்று தோழிகள் அன்பான கட்டளையிட......."சரி நாளைக்கு ராகேஷ் வந்தா நாமெல்லாம் சேர்ந்து போலாம்" என்று சொல்ல......ஓ பார்க்கலாம்டி என்று கத்திக்கொண்டே தோழிகள் கிளம்பினர்.
அன்றிரவு முதல் பிறந்தநாள்வாழ்த்தாக அத்தை வீட்டிலிருந்து வாழ்த்து அனுப்பியிருந்தனர் அது இவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் "ராகேஷ் அனுப்பவில்லையே ஒருவேளை மறந்திருப்பானோ ஒரு செய்தியும் இல்லை பார்ப்போம் எப்போ வாழ்த்து சொல்றான்" என்று நினைத்தாள் கயல்.......
அவளுக்கு ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்து பேசியவளுக்கு ஆச்சர்யம் காரணம் அத்தை பையன் மதன் அழைப்பில்.......
அவன் பெயரை சொல்லி பேசியதுமே முதல் தடவை என்பதால் கயலுக்கு ஒழுங்காக பேச்சு வரவில்லை ஆனால் மதன் எப்பொழுதும் பழகியவன் போல் நன்றாகப்பேசினான்......அவன் இவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னான் அவன் கேட்பவற்றிற்கு மட்டுமே பதில் சொன்னவள் வீட்டிலுள்ளவர்களை பற்றி மட்டும் விசாரித்துவிட்டு அழைப்பைத்துண்டித்தாள்.
காலையில் தோழிகளும் வீட்டிலுள்ளவர்களும் வாழ்த்த.....புதுத்துணியும் அணிந்துகொண்டாள் எல்லாம் நல்லபடியாக அமைய ராகேஷ் வாழ்த்து கிடைக்காத கவலை மட்டும் அவள் மனதில் இருந்தது,.
நேரே கல்லூரிக்கு வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி அங்கு வாசலிலேயே வழிமறித்துக்கொண்டிருந்தான் ராகேஷ்.
ராகேஷ் நீ???????என்று உதடு முழுவதும் புன்னைகைப்பூ பூக்க ஆச்சரியமும் சந்தோஷமும் பொங்கக்கேட்டாள்.........ம்.....சஸ்பென்ஸ் அதான் சொல்லாம என் தெய்வத்தை தரிசிக்க வந்தேன் என்றவன் கையிலிருந்த அவளுக்கு பிடித்த பிங்க் கலர் ரோஜாப்பூக்களால் ஆன அழகிய பூச்செண்டை அவள் கையில் கொடுத்து வாழ்த்தும் சொன்னான். அவளுக்கு அவனது அந்த வாழ்த்தில் ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு.........!.
எல்லாம் நல்லாத்தான் இருக்குது ட்ரீட் எங்க?என்று தோழிகள் கேட்க?
வச்சிருவோம் வாங்க உங்க ஆசைப்படி இன்னிக்கு கிளாஸ்கட் எல்லாரும் சேர்ந்து வெளில போலாம் திவ்யாவையும் அழைத்துவிட்டு வாங்க சேர்ந்து போலாம் என்று அவனும் சொல்ல.........சரி என்று இவர்கள் ஐந்து பேரும் மெயின் ஏரியா திருவனந்தபுரத்தில் இருக்கும் அந்த பெரிய பூங்காவிற்கு சென்றுவிட்டு SWISS BAKERKU போலாம் என்ற முடிவில் கிளம்பினர்.
அதே சமயம் மதனும் அங்கிருந்து விடுமுறை முடித்து வேலைக்கு செல்வதற்காக தன் நண்பர்களுடன் புறப்பட்டான் அவன் வேலைப்பார்க்கும் இடத்திற்கு செல்லும் வழியில்தான் இந்த பூங்காவும் இருக்கிறது......மதன் பாரஸ்ட் ஆபிஸராக வேலையில் சேர்ந்து ஆறுமாதம் ஆகிறது இதுதான் அவனுக்கான முதல்விடுமுறை இப்போது அவன் வேலைப்பார்ப்பதோ கேரளா என்பதால் அவனும் அவன் நண்பர்களுடன் திருவனந்தபுரத்தில் வந்து இறங்கினான்........
ராகேஷ்,கயல்விழி,திவ்யா,ஷீபா,அஜி இவர்கள் வந்ததும் அந்த பூங்காவிற்குள் நுழைந்தனர்......தன் நண்பனுடன் அந்த இடத்தில் வந்த மதன் எதேச்சையாக அந்த பூங்காவை நோக்கும்போது.....வெள்ளை நிறச்சுடிதாரில் தேவதை போல் மின்னிய கயலைக்கண்டான்.
என்ன அந்த பொண்ணு நம்ம ப்ரியதர்ஷினி மாதிரி இருக்காளே இதுதான் நம்ம கயல் என முடிவெடுத்தவன் நண்பனிடமும் அவளை காட்டிக்கொடுத்து விஷயத்தை சொன்னான்.
வா போய் பேசிட்டு வருவோம் என்று சொன்ன மதனை......நண்பன் ஏதோ சொல்லி தடுத்தான்.???
தொடரும்........!