திருமணத்திற்கு முன் ஆங்கிலப்புத்தாண்டு 01012015

திருமணத்திற்கு முன்
எங்கள் முதல்
ஆங்கிலப்புத்தாண்டு
கொண்டாட்டமும் கோலாகலமும்

தினம் அதிகாலையில் கூவும்
என் குயில்....
இன்று [01.01.2015] அமைதியில்..

என் “நிலா”வை காண
ஒரு வெண்ணிலா “கேக்”குடன்,
முத்(தம்)து வைத்து
ஒரு கடிகாரம் கொண்டு
அவள் வீட்டுக்கதவை
நான் தட்ட..

பூரிக்கட்டையுடன்
அவள் முகம் காட்ட
பூரிப்பில் நான்..

அந்நிலாவும்
நானும் சேர்ந்து
வெண்ணிலா கேக் வெட்டி
அதை நான் ஊட்டி,
பின் அவள் ஊட்டி
கொடைக்கானல் ஆனது
மாமியார் வீடு.

பிறகு ஆவலுடன்
அங்கும் இங்கும் பார்க்க
அதிசயங்கள் ஆர்ப்பரித்தது
அவற்றில் சில
என் கண்ணை பறித்தது

அதிகாலையில்
மூன்றுமணி முதல்
அவள் வீட்டு கிச்சனுக்குள் சுனாமி

பூரி,
சப்பாத்தி,
அடை
என வகை வகையாய்
என் வாய்க்காக வைத்தது,
எனக்கு வாய்த்த அது.

தினம் என்னை
பிச்சிப் பிச்சிப்போடுபவள்- இன்று
வெங்காய, வாழைக்காய் பஜ்ஜி
போட்டிருந்ததாள்.

காலை உடையில்
அந்த கலைவாணியின்
அழகு
என்னை மட்டுமல்ல
அந்த தேங்காய் சட்டினியின்
உப்பையும் தூக்கி விட்டது
உப்பும் நானும் தாக்கப்பட்டோம்

அவள் கேரெக்டர் “அல்வா” தான்
இன்று
அவள் கைவண்ணத்தில்
“கேரட் அல்வா”வும் தான்

எனை
எப்போதும் வதம் செய்பவள்
வீம்பாக வாதம் செய்பவள்
இன்று
அவளன்பை காதலாக்கி
அதில் உப்பு, மிளகாய்
வெங்காயாம் போட்டு
எனக்கு பிடித்த
புளிக்கொழம்புச சாதம் செய்திருந்தாள்

அதை
அவள் ஊட்டி விட
நான் சொக்கிவிட
கூச்சம் கொண்டது
சோறும் குழம்பும் மட்டுமல்ல
கோவிலுக்கு வந்த கும்பலும்தான்

அந்த
வாழைக்காய் வறுவலில்
வசியமான என் நாக்கு
இப்போது கோமாவில்
வேறு ருசி மறந்து முனகுகிறது
அவள் எப்போது வருவாள் என்று.

அதிலும் அற்புதம்
இன்று வைகுண்ட ஏகாதசி
அவள் விரதம்
சுவைக்காமல் அவள் செய்தது
அந்த கோவிந்தனுக்கு மட்டுமல்ல
இந்த
செல்வக்குமரனுக்காகவும் தான்

கந்தசாமியை திருப்போரூரில்
நாங்கள் கண்டு விட
அவர் ஆசியை மழையாய் பொழிந்தார்

அந்த மழைச்சாரலில்
மாநகரப்பேருந்தில்
இருவரும் ஒரே இருக்கையில்
இரு கையையும் கட்டிக்கொண்டு-நான்
கட்டுப்பாட்டுக்குள் நாங்கள்

இரக்கமின்றி இளையராஜா எங்களை
இம்சித்தார் இப்படி
“மாடத்திலே...கன்னி...மடத்திலே...”

வழியில்
எங்கள் விழியில்
விழுந்தது “காபி டே”
அதில் போச்சு எங்க “ஆப் டே”
உச்சுக்கொட்டி
ஊதிக்குடித்தோம் ஒருவரைஒருவர்
ஆறிய காபியாய்.

போட்டுக்கொடுத்த
அந்த “காபி டே”க்கு நன்றி
காபி நுரையில்
காதல் சின்னத்தை.

இக்கணம்
“காலை”யை “மதியம்” விழுங்கி
“மதியம்” மாலையில் மயங்கி
இரவைத் தழுவியது

என் மாமியார் வீட்டில் இல்லாத
குறையை சேமியா உப்புமா
செய்து தீர்த்தாள் - என்னவள்

இவ்வாறு
எங்கள்
முதல் ஆங்கில புத்தாண்டு [01.01.2015]
கொண்டாட்டம்
“சுவை” மிகு இனிப்புடன்
ஆங்கில முறையில் (Bye)
இனிதே நிறைவடைந்தது

- ஒரு கவிஞன்

எழுதியவர் : ஒரு கவிஞன் (3-Jan-15, 6:05 pm)
பார்வை : 105

மேலே