நண்பர்கள்
நல்ல அன்பர்கள்
சிலர் கள்வர்கள்
என்று கண்டுகொள்ள
முடியாதவர்கள்
சிலர் செல்வர்கள்
குணத்தில் பரம ஏழைகள்
படும் பிச்சைகாரர்கள்
பலர் குடிகாரர்கள்
தோழனை பெரும்"குடி"யாக்குபவர்கள்
கொடியர்வர்கள்
எவருக்கும் படியாதவர்கள்
உண்மையில் இவர்கள்
எதுவும் முடியாதவர்கள்
அரியவர்கள் சிலர் - அதில்
சிவன் அடியார்கள் சிலர்
பண்பாளர்கள் சிலர்
பகுத்தறிவாளர்கள் சிலர்
விஞ்ஞானிகளும் சிலர்
மெய்ஞ்ஞானிகளும் உளர்
இவற்றுள் தமக்குரியர்
தேடி அரியவர்கள் தாம்
நல்ல நண்பர்களை கொண்ட
தனவான்கள்