தாயுமானவள்
உயிரே
உன்னை நினைத்து
உறங்கிய நான்...........
ஓர் நாள் உறங்கியே
போய் இருப்பேன் .............
அப்போது
என் உற்றாரும் உறவினரும்
என்னை சுற்றி நிற்பர்........
ஏற்கனவே
உன்னால் வெந்து போன
என் உடலை வேக வைப்பதுர்க்காக
அப்போது
நீ விம்பி விம்பி
அழுவாய்.............
உன்னால்
நான் பட்ட
துயரத்தை எண்ணி ...........
அன்பே
அப்போதும் கூட
என் மாய விரல்கள்
உன் மை விழிகளை
துடைத்து விடும் ..........
ஏனனெனில்
எனக்கு காதலியானவள்
மட்டும் அல்ல
என் தாயுமானவள் ...............