சாதி ஒழி மதம் அழிசாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015

சந்தனத்தை பூசிக்கொள்ளும் மனிதனே :சாதி
சாக்கடையில் விழுந்து விழுந்து ஓடுகிறாயே
பூக்கடைக்கு போய்நிற்கும் பித்தனே :வண்ண
பூக்களுக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறாயே

நபியின் மறையிலில்லை சாதிமதம்:ஓடும்
நதியின் நீரில் உண்டோ சாதிமதம்
கடலின் உப்பிலில்லை சாதிமதம் :அந்த
கர்த்தரின் பார்வையில் காணவில்லை சாதிமதம்

பூவின் மணம்நுகரா துபோகிறாய் :நீயோ
ஆவின்பால் வெண்மை யறியா திருக்கிறாய்
நால்வகை வேதத்தையும் நவிலுகிறாய்:ஆனே
நாளும்பொழு தும்நம்சா தியென்றே சாகிறாய்

கையூட்டு பெறும்போது தெரியலையோ :சாதி
காந்தி ரூபா நோட்டில் மறைந்ததுவோ
சாதிக்க பிறந்தவனே சாதி: நீசாதி
போதிமர புத்தர்களையும் கொஞ்சம் யோசி

ஆவி துடிக்கையில் அடுத்தவர் ரத்தம் வேண்டுகையில்
பாவிமகனே பார்ப்பாயோ சாதி மதபதரை
நாவடங்கி நரம்படங்கி நால்வர்கா லில்போகையில்
தூவுகின்ற பூக்களெல்லாம் துப்பிச்செல் லுமுன்திமிரை :

வாழும்நாள் கொஞ்சம் வாழ்ந்து பாரடா
வீழும்போது வருவதந்த ஈக்கள் தானடா .
பூவாக மணத்து பூமியில்நிம் மதிதேடு
கூவமாற் றிலினியுன் சாதிமதஆ டைகளைப்போ(டு).


நான் : சுசீந்திரன்.
உரிமம்: என்னுடையது
நாள் :3.1.2015
வசிப்பிடம் : சென்னை
தகவல் தொடர்பு:
எண் .11,
9 வது குறுக்குத் தெரு ,
பாலாஜி நகர்,
கொளத்தூர் ,
சென்னை -600099.
அலைபேசி :9791652091.
இந்த படைப்பு என் சொந்த படைப்பு.

எழுதியவர் : சுசீந்திரன். (3-Jan-15, 9:43 pm)
பார்வை : 104

மேலே