எனது இருப்பு

நீங்கள்
செதுக்கி எறிந்த‌
பொம்மை உதட்டில்
புன்னகைமட்டும்
அரைகுறை!!

உங்களுக்கு
அவசிப்படாத‌
கழிவுத்தொட்டியில்
அவர்களின்
உயிர் அங்காடி
உருவூட்டப்படுகிறது!!!

உங்களில்
சிலரின் காதல்
புனிதமானது!!
கட்டிலறை
இன்பம்வரை!!

இது படிக்கையில்
சிலருக்கு சினம்
தலைக்கேறலாம்!!
வாருங்கள் உங்கள்
தெருக்கோடிக்கு!!

என் மீதான‌
கோபத்தை
கழுவலாம்!!
கழிவுத்தொட்டி
குழந்தையின்
கண்ணீர்!!!

ஏமாற்றம்
எவருக்கென்று
அறியாமலே
ஏமாறிவிடுகிறது
உங்களில் சிலரின்
கருக்கள்!!!

உங்கள் இன்பத்தின்
விளைச்சலை
அனுபவிக்க‌
மறுக்கும் உங்களை
என்ன செய்வது!!!

என்னைப்போல்
சிலர் எழுத்திலும்
உங்களில் சிலர்
தெருவிலும்!!
இன்னும் சிலர்
ஆதங்கத்திலும்!!

கொட்டிவிட்டு
அடுத்தவேளை
உண‌வுக்கான‌
ஓட்டத்திற்க்கு தயார்!!

எங்கள் எழுத்திலோ
சிலர் ஆதங்கத்திலோ
தீர்ந்துவிடுவதில்லை
உங்கள் இளமையின்
அறியாமை!!!

பாசம்
என்னவிலை
வினவும்!!
குழந்தைளை
காணுங்கள்
மாறலாம் நீங்கள்!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (3-Jan-15, 10:40 pm)
Tanglish : enathu irppu
பார்வை : 93

மேலே