உன் மீதான காதல் மட்டும்
என்ன எழுதுவது !
என்னை எழுதவா - நான் !
என்ன எழுதினாலும்
உன்னைப் பற்றி என்கிறார்களே !
உண்மைதானா !
உன் மைதானா
என்னை எழுதுவிப்பது !
எப்படி இருந்தால் என்ன
எப்படியும் எறிந்துவிடப் போகிறாய் !
எங்கோ விழுந்தாலும்கூட
இங்கே வளர்கிறதே
உன் மீதான காதல் மட்டும் !