சரித்திரம் படைக்க நீயும் எழுந்திடு
பிரச்சனையைக் கண்டு பயந்தால் மனமே
பித்துப் பிடிக்கும் நமக்கும் தினமே
பிரித்து மேய்ந்திடுவோம் சவாலை இச்ஷணமே...
பின்னாளில் வருந்தவேண்டாம் எல்லாமும் நலமே...!
குத்திய முள்ளை முள்ளாய் எடுத்திடு
புத்தியை தீட்டி கூராய் வைத்திடு
சக்தியை திரட்டி மோதிட துணிந்திடு
சரித்திரம் படைக்க நீயும் எழுந்திடு.........!!