நாளைய தமிழும் தமிழரும் தை பொங்கல் கவிதை திருவிழா-2015

தமிழினமே நம் முதாதையர்
முத்தம் இட்டு விளையாடி ............
முன்னூறு தலைமுறை களம் அடித்து நெல் ஆடி ....................
மூவேந்தர்வுடன் உறவாடி முத்தமிழும் ,
நலமாடிய சகோதர தமிழினமே.....!
மண்ணில் இடம் கிடைக்குமோ நாளை உனக்கு ...............!
குடகுமலையில்
காவேரி குழந்தையாய் குதித்தாடி............
வாழை குமரியாய் முல்லை பெரியார் என பெயர் சூடி
பாய்ந்த இடம் எங்கும் .......
பச்சைவண்ண ஆடை கட்டிய ஆற்றின் ,
நீரும் கூட எழுதப்படுமோ நாளை !
நிழல் சாயா கோபுரத்தை தஞ்சையிலே ,
கட்டி தலை சாயா தமிழினமே!
இலவசங்கள் வேண்டுமோ உனக்கு!
தமிழ் தானே என்ற சொல் மாறி......
தமிழ் தேனே என்று ஒலிக்குமோ நாளை ..!
என் தமிழினமே மயக்கத்தில்
நீ இருந்து மடிந்தது போதும் .............
ஏக்கத்தை தூர விரட்டி நீயும் புறப்படு தமிழா ....!
நம் தமிழ் தாயின் மார்புவரை வளர்ந்திட்ட புற்று மண்ணை ...........
புரட்டி விடுவோம் இன்றே !
புறப்படு தமிழினமே...........!

நான் : விவேகா ராஜீ
உரிமம் : என்னுடையது
நாள் : 4.1.2015
வசிப்பிடம் : கோயம்புத்தூர்
தகவல் தொடர்பு : பிளட் எண்: s 1 v square apt
29-32 சின்னசாமி நகர் ,
தொண்டாமுத்தூர் ரோடு ,
ஒனபாளையம் ,
தீனம்பளையம் போஸ்ட்,
கோயம்புத்தூர் 641109.
அலைபேசி :7502054154
இந்த படைப்பு எனக்கு சொந்தம்

எழுதியவர் : விவேகா ராஜீ (4-Jan-15, 4:28 pm)
பார்வை : 272

மேலே