இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி 2015

உள்ளமே உருவாகக்
கலந்திருக்கும் காதலில்
கண்களாய் வாழ்ந்திருப்போம் ;
மண்ணிலோ மாற்றமுண்டு ,
மடிகொண்ட தேடலில்
மறுபிறவிகளாவோம் ....

வெள்ளித்திரை , சின்னத்திரைக்
கனவுகளெல்லாம் - வேண்டும்
வரமென ரகசியமாவோம் ;
சாதியும் , மதமும்
அன்பின் அகல்களாக - சிறு
முல்லைச் சுடர்களாவோம் ...

காற்றெனக் கடப்பதாய்
இல்லாமையும் சுவாசிப்போம் ;
கவலைகள் கோதும்
கோதுமை ரேகைகளின்
பிடிவிரல்கள் பற்றும்
நெடுவழி ஆறுதலாவோம் ....

கணம் தோறும் கரையும்
இதயத் துடிப்புகளின் வழியே
கற்பனைகள் தொலைத்த
கடிகாரமாவோம் ;
உயிரென்ற புரிதலிலும்
ஊடல்களாயும் புன்னகைப்போம் ...!

எழுதியவர் : புலமி (4-Jan-15, 7:14 am)
பார்வை : 134

மேலே