புதிய பாரதம் மலரட்டும்
தீவிரவாதம் இல்லாமல்
தீண்டாமைகள் இல்லாமல்
அஹிம்சையை கடைபிடித்து
ஆனந்தமாய் இருந்திட
புதிய பாரதம் மலரட்டும்...
அழிவுதரும் அறிவியல் இல்லாமல்
ஆக்கம் தரும் அறிவியல்
அமோகமாய் வளர்ந்திட
புதிய பாரதம் மலரட்டும்...
பொறுமையுடன் மகாத்மா
போதனைகளை கடைப் பிடித்து
போதை என்ற பாம்பை அடித்து
பொய்யில்லாமல் வாழ்ந்திட
புதிய பாரதம் மலரட்டும்...
இன்னும் இருபது வருடத்திலே
இனிய இந்தியாவை வளர்த்திட
இந்தியனே இந்தியாவை ஆட்சி செய்து
இந்தியனாக வாழ்ந்திடவே
புதிய பாரதம் மலரட்டும்...
துன்பம் என்ற பேய் அதனை
துணிவாய் நின்று விரட்டிடவே
துணையாய் அனைவரும் கைகோர்த்து
துதிக்கைப் போல எழுந்திடவே
புதிய பாரதம் மலரட்டும்....
வறுமை ஒன்றே வாழ்வென்று
வாழும் ஏழை இந்தியரை
வாழ்த்தி வணங்கி உயர்த்திடவும்
வற்றா ஊற்றாய் இந்தியாவை வல்லரசாக்கிட
புதிய பாரதம் மலரட்டும்...
புதிய பாரதம் மலரட்டும்
போதனை பலவும் பெருகட்டும்
தலைக்கனம் கொண்ட பிற நாடு
தலைகுனியட்டும் இந்தியாவுக்கே...