ஒரு நாள் ரவுடி -இறுதி பாகம் - சந்தோஷ்

அவளொரு லெக்கின்ஸ் தேவதை.
கட்டழகு மேனிக்காரி..
செந்தூர நிறத்தழகி.
நெற்றியில் சின்னப்பொட்டு
காதில் பேன்சி வளையம் போட்டு
மெல்லிடையில் வல்லமைக்கூட்டி
ஸ்கூட்டியில் வந்தாள் அந்த விழியழகி..!''


"ஹாய் இன்பா...! "

"போடி... ஏன் இவ்வளவு லேட்டு ? நான் வேற ஒரு டென்ஷன் ல இருக்கேன்.. .. இப்போ பார்த்து லேட்டாவா வருவ ??"

" இன்பா.. எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. 'டி' போட்டு கூப்பிடாதேன்னு எனக்கு பிடிக்கல " பொய்கோபமிட்டவளை மெய் அணைத்து.. முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தினான் ஐந்தரை அடி உயரம், சில நரைத்த முடியுடைய இன்பக்குமரன்.

" ம்ம் சரி வா. காபி சாப்பிட்டே பேசுவோம் "

இருவரும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கவனித்த ஒர் இளம்பெண்....அவர்களின் அருகில் சென்று " எக்ஸ்கியூஸ் மீ நீங்க சந்தோஷ் தானே ? "

இன்பா திடுக்கிட்டான் " சந்தோஷா. யாரு அவன் ..? பேர பாரு சந்தோசு.... புந்தோசுன்னு. ஆமா நீங்க யாரு...?"

"அண்ணா ,, இப்போ ஏன் பொய் சொல்லுறீங்க. "

" அண்ணா வா........ அவர் செத்து போயிட்டார் மேடம்... அதுக்கு அப்புறம் கலைஞர் தி,மு.க தலைவர் ஆகிட்டார். அடுத்தது தளபதிக்குதான்.. வாய்ப்புன்னு பேசிக்கிறாங்க.."

.".. பேரை மாத்தி.. ஊரை ஏமாற்றியது போதும்.. பொய் சொல்லாதீங்க.. நீங்க சந்தோஷ் தானே..?.. தெரியும். ' மொழி.காம் ' ல கவிதை..கதை எழுதுற இரா. சந்தோஷ் குமார்... நீங்க தான்...?"


"கொஞ்ச நாளா நீங்க தளத்தில எதுவும் எழுதுவது இல்லை. நிறைய மாற்றம் இருக்கு .. உங்ககிட்ட... "

"அது சரி... நீங்க யாரு,,, ? "

"ம்ம் அந்த தளத்தில நீங்க என்னை தங்கச்சின்னு கூப்பிடுவீங்க "

இன்பக்குமரன்.....யோசிக்கிறான்.. " யாரா இருக்கும்.. " வித்யா.. ரம்யா.. நித்யா.. பிரியா..."

"ஹா ஹா... அண்ணா அண்ணா... மைண்ட் வாய்ஸ்ல பேசுறேன்னு நினைச்சிட்டு வாய்விட்டு பேசுறீங்க.. ஹய்யோ ஹய்யோ "

தலையில் தன்னை தானே கொட்டுவைத்தவனாக... " ஆமா நான் தான் சந்தோஷ்... நீ யாரும்மா ?


"நீங்க சொன்ன சொன்ன " யா" க்கள்ல ஏதோ ஒரு யா கூட நான் இருக்கலாம். இல்லாம கூட இருக்கலாம். பட் அது இப்போ தேவையில்ல. 3 மாசத்திற்கு முன்னாடி நீங்கதானே அந்த கொலை செஞ்சிங்க ?.. சோழிங்கநல்லூர் கொலை "

"அடப்பாவி.. ஜி கிட்ட தானே சொல்லியிருந்தேன். .. எப்படி உளறினார்... ஜி ... என்ன ஜி இப்படி மாட்டி விட்டுட்டீங்க. " மனதில் கவிஜியிடம் பேசிக்கொண்டிருந்த சந்தோஷ் குமாரை ... உலுக்கி...

" ஹலோ என்னாச்சு "

" ஆமா இப்போ நான் மைண்ட் வாய்ஸ்ல பேசினது கேட்டுச்சா.... உனக்கு ? "

"இல்லையே "

" அப்போ நான் அந்த கொலை பண்ணல "

" நோ... நீங்க தான் பண்ணியிருக்கீங்க.அந்த டெட்பாடி டிவில காமிச்சாங்க. அதுல...அந்த டெட்பாடிக்கிட்ட உங்க பேனா......... அதுவும் நீங்க பிரபல கவிஞர்கிட்ட வாங்கிய பேனா.... எனக்கு தெரியும்..அது உங்க பேனா.. சோ.... நீங்க... தான்..............அந்த கொலை பண்ணியிருக்கனும். உங்க எழுத்து எப்போவுமே கோபமா இருக்கும்.. அதான் செஞ்சி காட்டிட்டீங்க...."

" ஓ ஒ... இந்த பொண்ணு ரொம்ப நுணுக்கமா வாட்ச் பண்ணியிருக்கா....சி.ஐ.டி போலீசோ.... தங்கச்சின்னு சொல்லி என்கிட்ட விசாரிக்க வந்து இருக்க்காங்க போல... " மீண்டும் மைண்ட் வாய்ஸில் சந்தோஷ்...


" ஹா ஹா... அச்சோ அண்ணா... ஆமா.. நான் ஸ்பெஷல் கிரைம் பிரெஞ்ச் சி.ஐ.டி. சிட்டில நடக்கிற எல்லா கொலையும் கண்டுபிடிக்கிற வேலை. அதோ உக்கார்ந்து இருக்கிறாரே.. அவர் என்னோடு ஹையர் ஆபீசர். உங்கள வாட்ச் பண்ணிட்டு வந்தோம். மாட்டிகிட்டீங்க.. ம்ம் உண்மை சொல்லுங்க... எழுத்தாளர் நீங்க இப்படி பொறுப்பு இல்லாம தப்பு பண்ணலாமா ?"

"ஐயோ தங்கச்சி.. இப்போ நீ இல்ல என் கட்சி " நகைச்சுவை தொனியில் பதறாமல் சந்தோஷ்...."

"என்ன டி.ஆர் வசனமா ? .. எழுத்தாளரா இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணலாமான்னு கேட்டேன். பதில் என்ன ? "

"தப்பு சரி விட எனக்கு இப்போ வெறி .. எல்லாத்தையும் மாத்தனும்...ன்னு வெறி "

"பேனாவினால மாத்த முடியாதா... ? "

" ம்ம்ம் ஆமா பேனாவினால எழுதி கிழிக்க முடியல. அதான் பேனாவினால குத்தி கிழிக்கிறேன்.ஒகே.உங்க ஜீப் எங்க இருக்கு.. ? எந்த ஜெயில்ல போடுவீங்க... வேலுரா.... புழலா... ?? சிக்கன் பிரியாணிலாம் கிடைக்குமா ? பிரியாணில லெக் பீஸ் இல்லன்னா.. கம்யூனிசத்தின் படி போராட்டம் பண்ணுவேன்.,ஆமா சொல்லிப்புட்டேன்.."

"ஹா ஹா அண்ணா.. அண்ணா.. ஏமாந்துட்டீங்க.... இன்னிக்கு ஏபரல் 1 ..

ஏப்ரல் பூல் ... ஏப்ரல் பூல்....... " அந்த தங்கச்சி பெண் ஏதோ விளையாடுகிறாள் என்பதை உணர்ந்தாலும் தான் கொலை செய்த உண்மையை சொல்லிவிட்டோம் என்று ஒரு வித பதட்டத்திலிருந்தான் சந்தோஷ்....

" ஒகே ஜோக்ஸ் அபார்ட் அண்ணா, நீங்க போற ரூட் சரியில்ல... இப்படி கொலை பண்ணி ரவுடி பயலா சுத்ததான் சென்னைக்கு வந்தீங்களா..?. நீங்க பெரிசா சாதிச்சு சாகித்திய அகாடமி விருது எல்லாம் வாங்குற அளவிற்கு வருவீங்கன்னு நினைச்சேன்... " தங்கை பெண் அறிவுறுத்த அறிவுறுத்த.. சந்தோஷ். தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து பதற ஆரம்பிக்கிறான்...

" அண்ணா,., நான் கேட்டதுக்கு பதில்.... ? "

" என்னம்மா விருதா.............? அத வாங்கி... என்னை என்ன நாக்கு வளிக்க சொல்லுறீயா...? என் பேரை ஒரு பேப்பர்ல பிரிண்ட் அடிச்சு தருவாங்க .. அத வச்சு.. என்னத்த கிழிக்கமுடியும்... நான் பெரிய எழுத்தாளன்னு பீத்திக்கலாம்.. அவ்வளவுதானே...அதுனால இந்த பூமியில எல்லாம் மாறிடுமா.. என் பேர்ல இருக்கும் விளம்பரத்துல... இந்த நாட்டுல எந்த தப்பும் நடக்காதா ??? ம்ம்ம்ம்ம்ம் என்ன பேச வைக்காதீங்க.. "

" அண்ணா.. எழுதுகோல் மூலமா எல்லாம் மாறும்னு சொன்ன நீங்க ஏன் இப்படி மாறினீங்க.. எனக்கு புரியல ... நீங்களும் தப்புதானே பண்ணுறீங்க. எதுவா இருந்தாலும் நீதிக்கு தலைவணங்கிதான் ஆகணும்.. " அந்த தங்கையின் பேச்சை இடைமறித்தவனாக

" நீதியா.....எங்க இருக்கு நீதி... மண்ணாங்கட்டி.... ?"

" ... நீதி தேவதையின் தராசுல நீங்களும் ஒரு குற்றவாளிதானே..தப்பு பண்ணாதீங்க ப்ளீஸ்.. "

" ஹோ .. ம்ம்ம் அந்த தேவதை பொம்மை என்ன விலைனு ..கேட்டுச்சொல்லுமா.. வாங்கிக்கிறேன்.. "

" அய்யோ.. இது டூ மச்...ரொம்ப கொழுப்பு ஏறிப்போச்சு... உங்களுக்கு... ஆமா இவங்க யாரு....அண்ணியா ? "

"இல்ல இவ ஒரு கன்னி... "

"கன்னியும் கவிதை எழுதுவாங்களா.. நம்ம தளத்தில இருக்காங்களா.... ? "

"ம்ம் ஆமா.... ...." சந்தோஷின் கவனம் வேறு எங்கோ இருப்பதை உணர்ந்தவளாக அந்த தங்கை... சந்தோஷின் தோழியிடம்..

" ஹாய் உங்க நேம் என்ன ? "


டமால்...டமால்..!! அதிரடி வெடிச்சத்தம்...... அதிபயங்கர குண்டுவெடிப்புச்சத்தம்... கேட்டு... தங்கையும் தோழியும் திடுக்கிட... சந்தோஷ் மெளனப்புன்னகையிடுகிறான். "



" அண்ணா, என்ன சத்தம்...... இது............. பாம் பிளாஸ்ட் மாதிரி இருக்கு.........."


" ஹா ஹா ஹா... இது ஒரு படைப்பாளியின் காத்திர கவிதை............!! "

" என்ன உளறீங்க.... ? "

"சிம்பிள் , பேப்பர்ல எழுத வேண்டிய கவிதையை களத்தில எழுதிட்டு இருக்கிறேன்............ சிட்டில இருக்கிற டாஸ்மாக் குடோன்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி குண்டு வச்சேன்.... அது இப்போ கவிதை சொல்லிட்டு இருக்கு,,,, அரசாங்கத்திற்கு.... ஹா ஹா.,..


இனி சிறுமி கற்பழிப்பு

கிழவி கற்பழிப்பு ந்னு

நியூஸ் வருவது குறையலாம்... " சந்தோஷ்......... உண்மையில் யார் என்று திடுக்கிடுகிறாள் அந்த தங்கை.. இருந்தும்..

" இங்க வெடிச்சா மட்டும் தமிழ்நாடு புல்லா நிலைமை மாறிடுமா... ? "

" தலைநகரம் தலைப்புசெய்தி ஆனா... அரசாங்கம் பயப்படும்...... பயந்தா... மாறும்... மாறலைன்னா மாறவைப்பேன்... சரி. அவ என் ப்ரெண்ட் அவள அவ வீட்டுக்கு விட்டுட முடியுமா... ? ப்ளீஸ்.. உங்க அப்பாவை கூப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு இங்கிருந்து கிளம்புமா....நான் போறேன்... "

" எங்க போறீங்க அண்ணா ? "

"சரண்டர் ஆவதற்கு.... ஏன்னா.... இந்த குண்டுவெடிப்பை வச்சி.... எதாவது ஒரு அப்பாவி அக்பரையோ... ஜாபரையோ அரெஸ்ட் பண்ணிட்டு சீன் போடுவாங்க இந்த போலீஸ்காரங்க.. அவிங்களுக்கு எந்த ஒரு கணேசனும் .. ஜோசப்பும் குண்டுவைக்கமாட்டாங்கன்னு மூடநம்பிக்கை.. அதான் நானே போறேன். உண்மையை சொல்லி சரண்டர் ஆகுறேன்"

"உங்க வேலை முடிஞ்சிடுச்சா.... இப்போ மட்டும் நாடு திருந்திடுச்சா............அண்ணா... " அந்த தங்கை பெண் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமால்.... தனியாக சாலையில் நடந்து செல்கிறான் சந்தோஷ்............

டாப் ஆங்கிள் வியூவில் லாங் சாட்டில்......... அவன் செல்கிறான்

ஒரு டைட்டில் திரையில் வருகிறது..


கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்

-இரா.சந்தோஷ் குமார்...!



படத்தை பார்த்த மக்கள் வழக்கம்போல கைத்தட்டுகிறார்கள்.. யாரோக்கோ எடுத்த படம்... என்று..........நினைத்தவர்களாக .. திரையங்கை விட்டு வெளியேறுகிறார்கள்...

அப்போது..................



ஒரு நாள் ரவுடியாக...வரப்போகும் எதோ ஒரு நாளின் ரவுடியாக.............
ஓர் எழுத்தாளன்..... கையில் பட்டாக்கத்தியுடன்.................!!!!!!!!!!


(முற்றும் )



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Jan-15, 4:34 pm)
பார்வை : 368

மேலே